சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

சித்தார்த்தின் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு !
Updated on : 17 April 2022

கடந்த 10 ஆண்டுகளில், ETAKI ENTERTAINMENT சர்வதேச தரத்திலான  அசல் படைப்புகளை உருவாக்கும் நோக்கில்  உறுதியாக செயல்பட்டு வருகிறது, அதே நேரத்தில், காதலில் சொதப்புவது எப்படி, ஜில் ஜங் ஜக் மற்றும் அவள் போன்ற படைப்புகளின் மூலம் தகுதியான புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. இன்று, எங்கள் நட்சத்திரம் சித்தார்த்தின் பிறந்தநாளின் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், எங்கள் அடுத்த திரைப்படத்தை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.



 



எங்கள் "தயாரிப்பு எண். 4" (தற்போதைய தலைப்பு) இரண்டு நம்பமுடியாத திறமைகளை ஒன்றிணைக்கவுள்ளது. திறமையான மற்றும் உணர்ச்சிகரமான கதைசொல்லி S.U.அருண் குமார் (பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி) பன்முகத் திறமையும் தனித்துவமான நடிகருமான சித்தார்த்துடன் இணைந்து ஒரு முக்கியமான படைப்பை தரவுள்ளார். இது  உலகளாவிய பார்வையாளர்களை கவரும் ஒரு அருமையான  கிளாசிக் சினிமாவாக இருக்குமென நம்புகிறோம்.



 



எங்களின் புதிய முயற்சியான இப்படைப்பு  தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும். சக்தியும் கருணையும் கொண்ட எங்களின் தெய்வமான முருகப்பெருமானின் ஆசீர்வாதத்துடன், எங்கள் கதை அமைந்திருக்கும் தமிழ்நாட்டின் பழனியில் தற்போது பரபரப்பான வேகத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்கள், எங்களின் மதிப்புமிக்க வெளியீட்டு கூட்டணியாளர்கள் மற்றும் எங்களின் பட  வெளியீட்டு  உள்ளிட்ட விவரங்களை விரைவில் பகிர்வோம்.



 



திரைப்பட ஆர்வலர்களின் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம், இந்த முக்கியப் படைப்பை விரைவில் உங்களுக்குக் காண்பிக்க ஆவலுடன் உள்ளோம். எப்போதும் ஆதரவு அளித்து வரும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் உள்ள எங்கள் நண்பர்களுக்கு நன்றி மற்றும் இந்த பயணத்தில் அவர்களின் உற்சாகமான ஆதரவை எப்போதும் போல எதிர்பார்க்கிறோம்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா