சற்று முன்

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |    ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!   |    “சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு   |    சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!   |    சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை   |    ‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |    சுந்தர் சி – துரை V.Z. வெற்றி கூட்டணியில் திகில் படம்   |    பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை   |    பெண்கள் பாதுகாப்பை பேசும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

'மகிழ்ச்சி'-யில் ரஜினிகாந்த்; நன்றி தெரிவித்து ரசிகர்களுக்கு கடிதம்!
Updated on : 26 July 2016

தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் 30 நாடுகளில் வெளியாகி, கபாலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.



 



பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், ரித்விகா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கபாலி திரைப்படம், வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்தது வருகிறது.



 



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து விடுத்துள்ள கடிதத்தில், "கபாலி படத்தின் மிகப்பெரிய வெற்றி செய்தியை அமெரிக்காவில் கேள்விப்பட்டதை இன்று நேரடியாக பார்த்து, உணர்ந்து மிக்க சந்தோஷத்தில் இருக்கிறேன்.



 



இப்படத்தை தயாரித்த என்னுடைய நெடுங்கால நெருங்கிய நண்பர் தாணு அவர்களுக்கும், எழுதி இயக்கிய பா.ரஞ்சித் அவர்களுக்கும், அவருடைய குழுவினர் அனைவருக்கும், சக நடிக நடிகையர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



 



இப்படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்கிய என்னுடைய அன்பு ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும், முக்கியமாக தாய்மார்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தலைவணங்கி என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சி"  என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா