சற்று முன்

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |    ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!   |    “சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு   |    சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!   |    சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை   |    ‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |    சுந்தர் சி – துரை V.Z. வெற்றி கூட்டணியில் திகில் படம்   |    பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை   |    பெண்கள் பாதுகாப்பை பேசும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

ஆர்வத்தை தூண்டும் 'டூப்லைட்' ஒரு வரிக் கதை
Updated on : 29 July 2016

அறிமுக இயக்குநர் இந்த்ரா இயக்கி, நாயகனாக நடித்துவரும் புதிய திரைப்படம் 'டூப்லைட்'.



 



'ஆஸ்ட்ரிச் மீடியா புரோடக்ஷன்' சார்பில் ரவி நாராயணன் இந்த படத்தை தயாரிக்கிறார்.



 



படம் குறித்த தனது கருத்தை கூறியுள்ள  இயக்குனரும் - கதாநாயகனுமான  இந்த்ரா, "சராசரி கோட்டுக்கு கீழ் இருக்கும் ஒரு ஆண்,  தன்னை விட அழகும் அறிவும் அதிகமாக இருக்கும் பெண்ணை காதலிக்க,  அவர்கள் இருவரின்  வாழ்க்கையிலும் உள்ளே புகுந்து காய் நகர்த்துகிறார் ஒரு டாக்டர்.



 



அது எங்கே போய்  முடிகிறது என்பது தான் எங்கள் 'டூப்லைட்' படத்தின் ஒரு வரிக் கதை. இது ஒரு  பிளாஷ் பாக் படம் என்பதால் எங்களுக்கு   படப்பிடிப்பு சற்று கடினமாக தான் இருந்தது.... இந்த படத்தில் வலுவான கதாப்பாத்திரத்தில் நடித்த பாண்டிய ராஜ் சாருடன் இணைந்து பணிபுரிந்தது எனக்கு பல சிறப்பான அனுபவங்களை கற்று தந்திருக்கிறது.



 



நிச்சயமாக ரசிகர்களின் எல்லா எதிர்பார்ப்புகளையும் எங்களின் டூப்லைட் திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்யும் என பெரிதும் நம்புகிறேன்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.



 



தியா கதாநாயகியாக நடிக்க R.பாண்டியராஜன், பிரவீன் பிரேம், வினோத், புஜ்ஜி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா