சற்று முன்

‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |    ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீட்டு தேதி போஸ்டருடன்  அறிவிப்பு   |    சசிகுமார் மக்கள்மீது வைத்த நம்பிக்கை தான் ‘மை லார்ட்’ வெற்றியின் காரணம்!   |    வெற்றி நடிக்கும் ஆக்சன் திரில்லர் ‘பிளாக் கோல்டு’ படப்பிடிப்பு நிறைவு!   |    வெற்றிமாறன் வெளியிட்ட ‘அண்டர் 18’ டைட்டில் லுக் – சமூக யதார்த்தத்தை பேசும் புதிய முயற்சி!   |    ‘ஹாட்ஸ்பாட் 2’ வெற்றி கொண்டாட்டம், இயக்குநருக்கு சொகுசு கார்!   |    “நேர்மையான செய்திகளில்தான் நம்பிக்கை” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு   |    ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு துவக்கம், சிவராத்திரி நாளில் பிரம்மாண்ட பூஜை!   |    ‘ஜாக்கி’ நான்கு வார வெற்றி!, மதுரையின் மண் மணத்தை கொண்டாடும் டாக்டர் பிரகபல் படைப்பு   |    ‘வித் லவ்’ வெற்றி கொண்டாட்டம், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற படக்குழு!   |    விஜய் சேதுபதியுடன் தியாகராஜன் குமாரராஜா மீண்டும் இணைவு! ‘பாக்கெட் நாவல்’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்   |   

சினிமா செய்திகள்

ஆண் தேவதை படத்தின் சென்னை உரிமையை SPI சினிமாஸ் கைப்பற்றியது
Updated on : 28 July 2018

ஒரு படம் 'மாஸ்டர் பீஸ்', 'ஆர்ட் ஃபிலிம்' அல்லது 'பிலிம் ஃபெஸ்டிவல் திரைப்படம்' என்று மட்டுமே சொல்லப்பட்ட காலங்கள் வழக்கொழிந்து போய்விட்டன. சமகால பார்வையாளர்கள்  "ஆண் தேவதை' போன்ற யதார்த்தமான திரைப்படங்களை திறந்த மனதுடன் வரவேற்கிறார்கள். இந்த  படத்தின் ப்ரோமோ வீடியோக்களே பெரும் பாராட்டுக்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இப்போது "ஆண் தேவதை"  தமிழ்நாடு திரையரங்க உரிமையை புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருப்பது கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.



"வழக்கமான கமெர்சியல் விஷயங்கள் இன்றி நல்ல தரமான திரைப்படங்களை தயாரிப்பது அல்லது வெளியிடுவது என்பது வெறும் சுய திருப்திக்காக செய்த காலங்கள் உண்டு. ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. ரசிகர்கள் இந்த மாதிரி படங்களுக்கு வரவேற்பு கொடுப்பதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெறச் செய்கிறார்கள்" என்கிறார் "ஆண் தேவதை" தமிழ்நாடு உரிமையை வாங்கியுள்ள New RSM ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் எம். மாரிமுத்து. அவர் மேலும் கூறும்போது, "ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக, அல்லது நல்ல சமூக கருத்துக்களை பேசும் படங்களில் பங்கு பெறுவது என சமுத்திரகனியின் முயற்சிகளை பார்த்து எப்போதும் வியப்புடன் இருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் அவர் வெளிப்படுத்தும் 'நல்ல குடும்பத்தின் வெளிப்பாடு தான் நல்ல சமூகம்' என்ற அவருடைய குறிக்கோளை நான் பாராட்டுகிறேன். வருங்கால தலைமுறை எவ்வாறு வளர வேண்டும் என அவர் வெளிப்படுத்தும் விஷயங்கள் தான் இன்றைய முக்கிய தேவை. 'ஆண் தேவதை' படத்தில் இயக்குனர் தாமிரா உருவாக்கிய நல்ல கருத்து, சமுத்திரகனியின் சிறப்பான நடிப்பால் கொண்டு சேர்க்கப்படும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.



மேலும் அவர் சிகரம் சினிமாஸ், தயாரிப்பாளர் பக்ருதீனை முழு மனதுடன் பாராட்டுகிறார். "புகழ்பெற்ற இயக்குனரான கே.பாலசந்தர் சாரின் உருவப்படத்துடன் உள்ள 'சிகரம்' ஸ்டுடியோ, வலுவான ஒரு திரைப்படத்தை உருவாக்குவதை விட மிகச்சிறந்த மரியாதையை அவருக்கு தர முடியாது" என முடிக்கிறார் மாரிமுத்து.



ரம்யா பாண்டியன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், மேலும் சில முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். 'உணர்வுப்பூர்வமான' இசையை வழங்குவதில் பிரபலமான ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.



சென்னை நகர உரிமையை SPI சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா