சற்று முன்

‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |    ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீட்டு தேதி போஸ்டருடன்  அறிவிப்பு   |    சசிகுமார் மக்கள்மீது வைத்த நம்பிக்கை தான் ‘மை லார்ட்’ வெற்றியின் காரணம்!   |    வெற்றி நடிக்கும் ஆக்சன் திரில்லர் ‘பிளாக் கோல்டு’ படப்பிடிப்பு நிறைவு!   |    வெற்றிமாறன் வெளியிட்ட ‘அண்டர் 18’ டைட்டில் லுக் – சமூக யதார்த்தத்தை பேசும் புதிய முயற்சி!   |    ‘ஹாட்ஸ்பாட் 2’ வெற்றி கொண்டாட்டம், இயக்குநருக்கு சொகுசு கார்!   |    “நேர்மையான செய்திகளில்தான் நம்பிக்கை” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு   |    ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு துவக்கம், சிவராத்திரி நாளில் பிரம்மாண்ட பூஜை!   |    ‘ஜாக்கி’ நான்கு வார வெற்றி!, மதுரையின் மண் மணத்தை கொண்டாடும் டாக்டர் பிரகபல் படைப்பு   |    ‘வித் லவ்’ வெற்றி கொண்டாட்டம், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற படக்குழு!   |    விஜய் சேதுபதியுடன் தியாகராஜன் குமாரராஜா மீண்டும் இணைவு! ‘பாக்கெட் நாவல்’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்   |   

சினிமா செய்திகள்

இயல்பான நடிப்பால் இயக்குனரின் வேலையை எளிதாக்கிய இந்துஜா
Updated on : 28 July 2018

கண்ணன் ஒரு இயக்குனராக, ஒரு சிறந்த கலையுணர்வுடன் மட்டுமே திருப்தியடைய மாட்டார். சரியான கதாபாத்திர தேர்வாலும் மனநிறைவு அடைபவர். அவரது ஒவ்வொரு திரைப்படமும், எந்த வகை படமாக இருந்தாலும், நடிகர்களின் கதாபாத்திர தன்மை மற்றும் சரியான நடிகர் தேர்வு ஆகியவை ஒரு சுவாரஸ்யமான கவர்ச்சியாக மாறும். அவரது அடுத்த படமான 'பூமராங்' ஒரு விதிவிலக்கு அல்ல. இயற்கையாகவே, அந்த  படத்தின் நடிகர்களின் பட்டியல் ஒரு உதாரணமாக அமைகிறது. அதர்வா முரளி மற்றும் மேகா ஆகாஷ் போன்ற திறமையான நடிகர்களுடன், இந்துஜா சேரும்போது, அது மிக  பிரம்மாண்டமாக மாறுகிறது.



இந்துஜாவின் திறமையை பற்றி கூற 'திறமை' என்ற வார்த்தை மிக சாதாரண வார்த்தையாக இருக்கலாம். ஒவ்வொரு காட்சியிலும் தன் தன்னிச்சையான நடிப்பின் மூலம் எனது வேலையை எளிதாக்கினார் இந்துஜா. அவரது கதாபாத்திரத்தின் மிக உயர்ந்த தரத்தை உணர்ந்து, மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்" என்கிறார் இயக்குனர் கண்ணன். அவரது கதாபாத்திரம் குறித்து மேலும் கூறும்போது, "அதர்வா முரளி மற்றும் மேகா ஆகாஷ் கதாபாத்திரங்கள் 'பூமராங்' ஸ்கிரிப்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஸ்கிரிப்ட் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் போது, மிகச்சிறப்பான நடிப்பை வழங்கும் இன்னும் ஒரு திறமையான கலைஞரைக் கோருகிறது. இந்துஜா நடித்த இரண்டு படங்களில் அவரது நடிப்பை பார்த்தவுடன், இந்த  கதாபாத்திரத்துக்கு அவர்  உடனடி தேர்வாக அமைந்தார்" என்றார்.



ஆக்‌ஷன் - த்ரில்லர் படமான பூமராங் போஸ்ட் புரொடக்சன் பணிகளின் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளோம். இசை,  டிரெய்லர் மற்றும் உலக அளவில் வெளியிடும் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா