சற்று முன்

காதலும் ஆன்மீகமும் கலந்த படம் 'ஆலன்' - இயக்குநர் கே. பாக்யராஜ்   |    அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு   |    ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ள 'டிமான்டி காலனி 2'   |    ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |   

சினிமா செய்திகள்

மனித உரிமை போராளி ஷீபா லூர்தஸ் தனது பிறந்தநாளை நூறு குழந்தைகளோடு கொண்டாடினார்
Updated on : 28 July 2018

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வில்லிவாக்கம் பாரதி நகரில் உள்ள கடந்த ஐந்து ஆண்டுகளாக எச்ஐவியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பெண்களின் முன்னேற்றத்திற்க்கும், விளிம்பு நிலையில் இருக்கும் குழந்தைகளின் கல்விக்கு உதவிபுரிந்து வரும்  எச்ஐவி பவுண்டேஷன் சார்பாக நடத்த படும் கம்யூனிட்டி சென்டர் மூலம்  பராமரிப்பில் உள்ள நூறு குழந்தைகளோடு தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாக கொண்டாடினார் எழுத்தாளர், உளவியல் நிபுணர்,சமூக சேவகி, மனித உரிமை போராளி என பன்முக ஆளுமையுடன் வலம் வரும் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற முன்னாள் அழகி ஷீபா லூர்தஸ்.



சுவீடன் நாட்டிலிருந்து தமிழகம் வந்து களப்பணியாற்றி வரும் இவர் United samaritans india என்ற அமைப்பை உருவாக்கி தொண்டாற்றி வரும் இவர் தன்னுடைய பிறந்த நாளையும் தன்னுடைய முன் உதாரனமாக  இருக்கும் அப்துல்கலாம் மற்றும் பெரியாரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளையும் சமூகத்தின் விளிம்பு நிலையில் குழந்தைகளுடனும் கொண்டாடுவதில் பெருவிருப்பமுடைய இவர் தனது பிறந்த நாளை ஆதரவு அற்ற குழந்தைகளோடு கேக்வெட்டி கொண்டாடியது மற்றும் அன்றி அந்த குழந்தைகளுக்கு தேவையா ன நோட்டு புத்தகம் , பென்சில் பேனா போன்ற உபகரணங்களும் , உணவும் வழங்கப்பட்டது.



தொடர்ந்து பேசிய அவர் பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழகம் முழுவதும் தொழிற்பயிற்சி மையத்தை நிறுவி  அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்க்காகவும்,  ஏழை குழந்தைகளின் கல்வியை தொடர வழிவகை செய்யவும்,  அகதிகளாக இருக்கும் மக்களின் வழி அறிந்தவள் நான் ஆகையால் என்னால் முடிந்த உதவிகளை செய்ய முற்படுவேன் என்றும் கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா