சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள 'குருதி ஆட்டம்'
Updated on : 29 July 2022

Rockfort Entertainment தயாரிப்பாளர்  முருகானந்தம் தயாரிப்பில்  “எட்டு தோட்டாக்கள்”  படப்புகழ் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. பரப்பரப்பான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 5 உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். 



 



இந்நிகழ்வினில் 



இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..,



 



எனது உதவியாளனாக இருந்த ஶ்ரீகணேஷ் அறத்துடன் வாழும் நபர். அவனுடைய முதல் படம் மிகச்சிறப்பான ஒன்றாக அமைந்தது. படத்தின் திரைக்கதையில் எப்பொழுதும் ஒரு உணர்வு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் படம் ரசிகர்களுடன் இணைந்து பயணிக்காது. ஶ்ரீகணேஷ் உணர்வுபூர்வமான மனிதர், அவருடைய அந்த எண்ணங்கள் தான் இந்த திரைக்கதையை அமைக்க உதவியுள்ளது.  எனது உதவியாளர்கள் எப்பொழுதும் சிறந்த படம் தான் எடுப்பார்கள். இந்த படத்தில் அதர்வா பல பரிணாமங்களை காட்டியுள்ளார். பல தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் அறிமுகமாகிறார்கள். அனைவரும் இந்த படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும். நன்றி. 



 



இயக்குனர் ஶ்ரீகணேஷ் கூறியதாவது..,





இந்த படத்தின் மூலம் எங்களுக்கு மிகப்பெரிய பயணம் கிடைத்தது. தயாரிப்பாளர் என்னுடன் ஆரம்பம் முதல் முடிவு வரை உறுதுணையாக இருந்தார். எனது முதல் படம் முடித்தவுடன் அதர்வா என்னை நம்பி என்னுடன் படம் பண்ண ஒத்துகொண்டார். இந்த திரைப்படத்தின் திரைக்கதையில் மிகப்பெரிய  உதவியாய் இருந்தவர் அதர்வா. என் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குருதி ஆட்டம் காப்பாற்றும். இந்த திரைப்படம் பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அறிமுக திரைப்படம், அவர்கள் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தின் நடிகர்கள் பலருக்கு இந்த படத்தின் மூலம் பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இது ஒரு ஆக்‌சன் மற்றும் உணர்வுபூர்வமான கதையாக இருக்கும். இந்த படம் ஆகஸ்டு 5 வெளிவருகிறது, படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். 



 



நடிகர் அதர்வா கூறியதாவது..,





இந்த படம்  தயாரிப்பாளர்  முருகானந்தம் அவர்களால் தான் இவ்வளவு அழகாக உருவாகியுள்ளது.  இந்த படத்தில் பல இளம் நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஶ்ரீகணேஷ் இந்த கதையை சொல்லும் போது, கதையின் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அனைத்து கதாபாத்திரத்தையும் கோர்த்து, ஶ்ரீகணேஷ் நேர்த்தியான திரைப்படமாக மாற்றியுள்ளார். இந்த கதையை சிறப்பான ஒன்றாக மாற்றியது இசையமைப்பாளர் யுவன்.  இயக்குநர் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். இந்த படம் ஆகஸ்டு 5 வெளியாகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி. 



 





 



தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியதாவது..,





குருதி ஆட்டம் நாம் வெகுநாட்களாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு படம். கொரோனாவினால் பல படங்கள் சிக்கலில் மாட்டியது. அதை தவிர்த்துவிட்டு தான் இந்த படத்தின் வெளியீட்டை பார்க்க வேண்டும். அதர்வா ஒரு எனர்ஜிட்டிக் ஆன நடிகர். அவர் இந்த படத்தில் துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த குருதி ஆட்டம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். Rockfort Entertainment க்கு இது பெரிய வெற்றியாக அமைய வேண்டும். இயக்குநர் ஶ்ரீகணேஷ் திறமையானவர், இந்த படம் பார்க்க பிரஷ்ஷாக இருக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகள். 



 



நடிகர் வட்ஷன் பேசியதாவது..,





இந்த படம் எங்களுக்கு உணர்வுபூர்வமான படம். இயக்குநருக்கும், நடிகர் அதர்வாவிற்கும் எனது நன்றியை கூறிக்கொள்கிறேன். இந்த படம்  ஒரு புதுமையான ஆக்‌சன் திரைப்படமாக இருக்கும். 



 



தயாரிப்பாளர் கே ராஜன் கூறியதாவது..,





இயக்குநர் மேல் எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தது, அவர் மிகவும் திறமையான இயக்குநர். அவருடைய முதல் படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.  இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். நடிகர் அதர்வா அவருடைய தந்தையை போல நல்ல நடிகர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். 



 



நிர்வாக தயாரிப்பாளர் ஶ்ரீராம் பேசியதாவது…





இந்த திரைப்படம் புதுமையான ஆக்சன் படம், கடின உழைப்புக்கு பிறகு திரைக்கு வருகிறது. நடிகர் அதர்வா மிகப்பெரும் துணையாக இருந்தார். அவரால் தான் இந்தப்படம் முழுதாக முடிவடைந்தது. இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி



 



இப்படம் உலகமெங்கும் ஆகஸ்ட் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா