சற்று முன்

தமிழ் சினிமாவின் அடையாளமாக டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும் - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்   |    விஜய் சேதுபதி படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார்!   |    வாரம் ஒரு சினிமாவைக் குழந்தைகளுக்குக் காட்டுங்கள் - ராணுவ வீரரும் நடிகருமான காமராஜ்   |    எழுத்தின் பங்கு இல்லாததால் சினிமா சீரழிந்து வருகிறது: இயக்குநர் கதிர் பேச்சு!   |    ஓடிடி தளத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'டார்க் ஃபேஸ்’!   |    பொதுவாக ஈழத் தமிழர்கள் படம் என்றால் அது சோகமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும் - சசிகுமார்   |    ஜியோ ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 24 முதல் ப்ளாக்பஸ்டர் 'எம்புரான்' ஸ்ட்ரீமாகிறது!   |    ’என்.டி.ஆர்.நீல்’ படத்தின் படப்பிடிப்பில் ஏப்ரல் 22 ஆம் தேதி இணைகிறார் என்.டி.ஆர்.!   |    ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஆடுகளம் கிஷோர் நடிப்பில் 'கலியுகம்' பட வெளியீட்டு தேதி போஸ்டர் வெளியானது!   |    விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்' (ACE) ரிலீஸ், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!   |    வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கையில் நிறைய அழகான விசயங்கள் நடக்கும் - ‘ரெட்ரோ’ விழாவில் சூர்யா   |    'குபேரா' படத்தின் முதல் சிங்கிள் ‘போய் வா நண்பா’ வெளியாகியுள்ளது!   |    உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்களை நம்பி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! - கே.ராஜன்   |    இனிய இசை விருந்தாக வெளியாகியுள்ள 'என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச' – மையல் பட மெலோடி!   |    ரசிகர்கள் மத்தியில் வெற்றிக் கொண்டாட்டமாக மாறியுள்ள ’குட் பேட் அக்லி’   |    தொல்லியல் ஆராய்ச்சி ஆவணப் படத்தை வெளியிடும் ஹிப் ஆப் ஆதி   |    அல்லு அர்ஜுன் -அட்லீ -சன் பிக்சர்ஸ்- கூட்டணியில் சாதனைப்படைக்கும் #AA22xA6 !   |    மாஸ்டர் சித்தார்த் பன்னீரின் 'மிஸ் மேல கிரஷ்' பான் இந்திய வீடியோ ஆல்பம்!   |    உங்களுக்குத் தேவையான அத்தனை தீனியும் 'கேங்கர்ஸ்'ல் இருக்கிறது - நடிகர் வடிவேலு   |    மிரட்டலான ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக உருவாகியுள்ள “45” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா!   |   

சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவின் அடையாளமாக டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும் - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்
Updated on : 28 April 2025

நடிகர் சசிகுமார் - சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ' டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட், படக்குழுவினருடன்,  திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள,  பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.



 



அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ' டூரிஸ்ட் ஃபேமிலி 'எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.



 



வெகு கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவினில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள், படம் பார்த்த மகிழ்ச்சியில்  படம் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். 



 



எதிர்வரும் மே மாதம் 1 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன், இயக்குநர் அபிஷன் ஜீவிந், நாயகன் சசிகுமார், நடிகர் மிதுன் ஜெய் சங்கர், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



 



இந்நிகழ்வினில்.... 





இயக்குநர் ராஜு முருகன் கூறியதாவது...



எல்லாருக்கும் வணக்கம்,  டூரிஸ்ட்ஃபேமிலி படம் பார்த்துவிட்டேன்,  ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு கலகலப்பான, உணர்வுப் பூர்வமான  ஃபேமிலி என்டர்டெயினர்  படமாக இருந்தது.  தமிழ் சினிமாவில் இன்றைய சூழலில்  அன்பைப் பேசுகிற,  நம்முடைய மென் உணர்வுகளைப் பேசுகிற மனிதத்தைப் பேசக்கூடிய படைப்புகள் வருவது அரிதாகிவிட்டது. அப்படி வருகிற சில படங்கள் கூட,  கிராப்ட் அளவில் சரியாக இல்லாமல், சுவாரசியம் இல்லாமல் போவதால்,  மக்களுக்கான படங்களாக இல்லாமல் போய்விடுகிறது. இந்த சூழ்நிலையில் தான், கதையும் படைப்புத் திறனும் சரியாகக் கலந்த கலவையாக  இந்த  அற்புதமான படைப்பு வந்துள்ளது. இந்தப்படம் பார்த்த போதே கண்டிப்பாக இப்படத்தைக் கண்டிப்பாகத் திரையரங்குகளில் மக்கள் கொண்டாடுவார்கள் என நினைத்தேன். இயக்குநர் அபிஷன் ஜீவிந் உடைய முதல் படம் போலவே தோணவில்லை, படத்தில் அத்தனை முதிர்ச்சி இருந்தது. ஒரு சிக்கலான பின்னணியை  எடுத்துக்கொண்டு,  எந்த அரசியலும் பேசாமல், மனிதர்களுக்கான அற்புதமான அரசியலைப் பேசியுள்ளார்.  நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை, அறிவுரையாக இல்லாமல், செம ஜாலியாக சொல்லியுள்ளார். அவருக்குத் தமிழ் சினிமாவில் பெரிய எதிர்காலம் இருக்கிறது. சசிகுமார் சாரை பார்க்கும்போது மிகுந்த  ஆச்சரியமாக இருக்கிறது. வெற்றியோ, தோல்வியோ அவருக்கென்று மக்களிடம் ஒரு மரியாதை இருந்துகொண்டே இருக்கும். சமீபமாக அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள், அடுத்த தளத்தில் இருக்கிறது, அந்தளவில்  மிக  முக்கியமான படமாக டூரிஸ்ட்ஃபேமிலி இருக்கும். அழகான கதைகள் கொண்ட மலையாள படங்கள் மாதிரி தமிழில் வருவதில்லை எனும் ஏக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. அதை உடைக்கிற ஒரு தயாரிப்பு நிறுவனமாக மில்லியன் டாலரை நான் பார்க்கிறேன். அப்படி ஒரு அழகான படைப்புகளைத் தொடர்ந்து செய்கிறார்கள். இப்படம் அவர்களுக்கு ஹார்ட்ரிக் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி. 



 



இயக்குநர் சசி கூறியதாவது...



ஒரு திரைப்படம் பார்க்கிற யாரையுமே சங்கடப்படுத்தாமல் அதே சமயத்தில், சந்தோஷப்படுத்துகின்ற வகையில் ஒரு படம் செய்வது அதிலும் அதை அதை முதல் படமா செய்வதற்கு மிகப்பெரிய மனது வேண்டும். இயக்குநருக்குப் பெரிய மனது இருக்கிறது. படத்தில் ஒவ்வொரு காட்சியும் அத்தனை அழகாக அற்புதமாக உள்ளது.  ஸ்ரீலங்கா பின்னணியில் ஒரு கருவை எடுத்துக்கொண்டு, அதில் அரசியல் பேசாமல், அன்பைப் பேசியதற்காகவே இது தமிழ் சினிமாவில்  மிக முக்கியமான படமாக உருக்கும்.  மில்லியன் டாலர் நிறுவனம் மெயில் பார்த்து இந்தக்கதையைக் கேட்டிருக்கிறார்கள், இது தமிழ் சினிமாவில் நடக்காத அதிசயம், அவர்கள் நல்ல கதைகளைத் தேடி, தயாரிக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. ஒரு அப்பாவாக சசிகுமார் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார், சிம்ரன் மேடம் உடனான காட்சிகள் அனைத்தும் அருமையாக உள்ளது. முழுக்க முழுக்க அன்பைப் பேசும் இப்படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்



 



இயக்குநர் வசந்தபாலன் கூறியதாவது.. 



இந்தப்படம் இன்னும் பார்க்கவில்லை, டீசர் பார்த்து அவ்வளவு சிரித்தேன், இங்குப் படம் பார்த்தவர்கள் பேசுவதைக் கேட்கும்போது படம் பார்க்கும் ஆவல் கூடுகிறது. சசிகுமார் சார் முகத்தில் இத்தனை நாள் பார்க்காத மகிழ்ச்சியைப் பார்க்க முடிகிறது. சசிகுமார் சாரை, மதுரையிலிருந்து இலங்கைக்குக் கூட்டிப்போனதற்கே  பெரிய பாராட்டுக்கள். இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடிக்கிறேன் என ஒத்துக்கொள்ளவே ஒரு தைரியம் வேண்டும் அது அவரிடம் இருக்கிறது. ஒரு கதை சுருக்கத்தைப் படித்து ஒரு நிறுவனம் படம் செய்ய ஒத்துக்கொள்கிறது என்றால் அதை நம்ப முடியவில்லை, நல்ல கதைகளைத் தேடித் தயாரிக்கும் மில்லியன் டாலர் நிறுவனம் பெரிய வெற்றி பெற வேண்டும். பசங்க படம் தயாரித்த காலகட்டத்தில் சசிகுமார் சாரை பார்த்தது போலத் தான் அவர்களைப் பார்க்கிறேன் அதே உற்சாகம் அவர்களிடம் இருக்கிறது. வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 



 



இயக்குநர் த செ ஞானவேல் கூறியதாவது..  



இந்த திரைப்படத்தைப் பார்த்து விட்டேன் கண்டிப்பாக இப்படம் வெற்றி பெறும்.  ஒரு ஒரு போர் பத்தி, அது ஏற்படுத்துகின்ற விளைவுகள் பத்தி,  ஒரு குண்டு சத்தம் இல்லாமல் ஒரு அது சம்பந்தமான ஒரு அழுகாட்சி இல்லாமல்,  மிக ஆழமாகப் போரின்  வலியை வந்து இந்தப் படம் பேசியுள்ளது.  இதோட நகைச்சுவை எல்லாரும் பேசுவார்கள்  ஆனால்  வலியைச் சொன்னால் கூட  நமக்கு அது பாதிக்காது, ஆனால்  வலியை மறைத்துக் கொண்டு  சிரித்துக் கொண்டே அதெல்லாம் ஒன்னு இல்ல அப்படின்னு சொல்றது இருக்கு இல்லையா அது மிகத் துயரமானது. அழகான ரசனையான ஒரு நகைச்சுவைக்கு பின்னால் ஒரு போர் என்ன செய்யும் அப்படிங்கிறது தான் இந்த கதை.  பெண்கள், குழந்தைகள், விலங்குகள் போன்றவற்றைப் பாதுகாப்பது போன்ற சில விதிகள் போரில் முக்கியம்.  ஆனால் இப்போது உலகம் கொடூரமாக மாறிவிட்டது, மனிதாபிமானம் இல்லை. நம்மைச் சுற்றி நடக்கும் கொடூரங்களை நாம் தினமும் பார்க்கிறோம். இலங்கையில் போர் எவ்வளவு இரக்கமற்றது என்பதை நாம் அனைவரும் படித்திருக்கிறோம். அது உருவாக்கிய தாக்கம் பேரழிவை ஏற்படுத்துவதால் மக்கள் இன்று வரை துன்பப்படுகிறார்கள். படத்தைப் பார்க்கும்போது நான் பிரமித்துப் போனேன், ஏனென்றால் அது போன்ற ஒரு நாட்டிலிருந்து வரும் ஒரு குடும்பத்தைப் பற்றிய ஒரு மகிழ்ச்சியான திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். இதற்காகவே இப்படம் வெற்றி பெற வேண்டும். இப்படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். 



 



இயக்குநர் விநாயக் சந்திரசேகர் கூறியதாவது..  



இந்தப் படத்தில் நான் எந்த வேலையும் செய்யவில்லை. ஆனால்  மில்லியன் டாலர் தயாரிப்பு எப்போதும் என்னுடைய படமாகத்தான் பார்க்கிறேன், தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் எனக்கு இப்படத்தின் கதை சுருக்கத்தை அனுப்பினார், படிக்க அத்தனை சுவாரஸ்யமாக இருந்தது. இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஒரு ஆச்சரியம், அவர் ஒரு கல்லூரி ஜூனியர் மாதிரி இருக்கிறார், ஆனால் ஒரு விளையாட்டுப் போட்டியில் திடீரென்று வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வீரரைப்  போல் ஆச்சரியப்படுத்துகிறார். சசிகுமார் பற்றி நினைக்கும் போதே சுப்பிரமணியம் படம் ஞாபகம் வந்துவிடும், அப்படி ஒரு சிறப்பான படத்தைக் கொடுப்பது, அவரைத் தவிர வேறு யாராலும்  முடியாது. இப்படத்தில் அற்புதமான நடிப்பைத் தந்துள்ளார்.  குட் நைட் ஸ்கிரிப்டை முடித்த போது, யாருக்கும் அது உண்மையில் பிடிக்கவில்லை யாரும் தயாரிக்க முன்வரவில்லை. நான் மனச்சோர்விலிருந்தபோது, ​​தயாரிப்பாளர் யுவராஜ் யாரும் தயாரிக்கவில்லை என்றால், நான் செய்கிறேன் என்று சாதாரணமாகக் கூறினார். மறுநாள் அவர் போன் செய்து தனது சொத்தை அடமானம் வைத்துவிட்டுத் திட்டத்தைத் தொடங்குவோம் என்று கூறினார்.அதை நான் வாழ்நாளில் மறக்க மாட்டேன். மில்லியன் டாலர் எப்போதும் நல்ல கதைகள் செய்யும், இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 



 



இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறியதாவது..  



எல்லோருக்கும் வணக்கம் வள்ளுவர் சொன்னதிலிருந்து ஆரம்பிக்கலாம் அன்பின் வழியது உயிர்நிலை அப்படின்றது ஒரு முக்கியமான ஒரு குரலா நான் பார்க்கிறேன், அதவே கவிஞர் வைரமுத்து எ அன்பே சிவம்ல அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா ! அப்படின்றாரு அதுக்கும் கொஞ்சம் முன்னாடி போனால்,  அவரே  அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயசு 100 ன்னு சொல்றாரு.  அவ்வளவு அன்பு நிறைஞ்ச ஒரு படம் எடுத்த அபிக்கு  100 வருட ஆயுள் கிடைக்கட்டும்.  அவ்வளவு அன்பு இருக்கிற  இந்த படம்  இப்போதைய  காலகட்டத்தில்  மிக   முக்கியமான ஒரு படமாகப் பார்க்கிறேன்.  இப்படத்தில்  அனைவருமே மிகச் சிறப்பா நடித்துள்ளார்கள், சசி சார் சிம்ரன் மட்டும் இல்ல அவங்கள சுத்தி நடிச்சிருக்க அத்தனை பேரும் மிகச் சிறப்பா நடித்துள்ளார்கள். இப்படி ஒரு படத்தைத் தயாரிக்க முன்வந்த மில்லியன் டாலர் நிறுவனத்திற்கு நன்றிகள், அன்பான மனிதர்கள் யுவராஜ் மகேஷ் விஜய் எல்லாரும் எல்லாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.



 



இயக்குநர் புஷ்கர் காயத்திரி கூறியதாவது...



சசிகுமார் சார் படங்கள் மென்மையாகத் தொடங்கி இரத்தக்களரியாக முடியும்,  அப்படித்தான் நாம்  வழக்கமாகப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப் படத்தில் அப்படிப்பட்ட காட்சிகள் எதுவுமே இல்லை, படத்தில் முழு குடும்பத்தையும் உள்ளடக்கிய ஒரு அழகான காட்சி உள்ளது, ஸ்பாய்லர்கள் இல்லை, ஆனால் அந்தக் காட்சிக்காகவே நாங்கள் படத்தை மீண்டும் பார்ப்போம். அந்த குறிப்பிட்ட காட்சி அத்தனை அழகாக  இருந்தது. அந்த சிறுவர்களிடம் எப்படி நடிப்பை வாங்கினார்கள் என இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. சசிகுமார் & சிம்ரன் என்று குறிப்பிட்டதற்குத் தயாரிப்பு நிறுவனத்திற்குப் பாராட்டுகள். பல படங்களில் சிம்ரன் மேடத்தின் பங்களிப்பு கவனிக்கப்படாமல் போய்விட்டது, இது நிச்சயமாக அந்தப் பட்டியலில் சேராது. இந்தப் படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும்.  ஃபீல்-குட் படங்கள் திரையரங்குகளில் வெற்றி பெறுமா? என்ற குழப்பமான சூழ்நிலை இருக்கும்போது. மில்லியன் டாலர் பிக்சர்ஸ் சரியான படங்களை  ஹிட்டாக கொடுத்து தொடர்ச்சியாக நல்ல படங்கள் ஜெயிக்கும் என நிரூபித்து வருகிறது. இந்தப்படமும் அவர்களுக்குப் பெரிய வெற்றியாக அமைய வாழ்த்துக்கள்



 



நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது...



எல்லாருக்கும் வணக்கம் இந்த படத்தைப் பார்த்து அழுகையை அடக்கிக் கொண்டு இருந்தேன். சமீபமாக  சசிகுமார்  சார் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே அற்புதமாக உள்ளது. அவர் அடுத்துச் செய்யப்போகும் படம் பற்றியும் தெரியும். இப்போதெல்லாம் எமோஷனலாக இருந்தால் கிரிஞ்ன்னு சொல்லிவிடுகிறார்கள். அயோத்தி டைரக்டர் இந்த டைரக்டர் என எல்லாருக்கும் பெரிய நம்பிக்கை கொடுக்கிறார் சசி சார். இப்படத்தின் இரண்டாம் அத்தனை எமோஷனலாக இருந்தது, இசையில் ஷான் கலக்கியிருக்கிறார், திரைக்கதைக்குள் சென்று பின்னணி இசை அமைத்துள்ளார்.  ஒவ்வொரு தயாரிப்பாளரும் படம் எடுக்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருக்கும்போது, ​​மில்லியன் டாலர் பிக்சர்ஸ் தங்கள் ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ளார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.  



 



நடிகர் மணிகண்டன் கூறியதாவது..  



'டூரிஸ்ட் ஃபேமிலி'  படம் ரெடியான இந்த இரண்டு வாரத்தில் படம் பற்றி நிறைய நல்ல விசயங்களைக் கேட்க முடிகிறது. ஆனால் எனக்கு 1.5 வருடங்களுக்கு முன்பே இந்தப்படம் பற்றித் தெரியும்.  அதாவது இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் முழு ஸ்கிரிப்டையும் எனக்குச் சொன்ன போதே மிரட்டலாக இருந்தது. அவர் கதை சொல்வதே படம் பார்த்த மாதிரி இருக்கும். சசி சாரைத் வேறு யாரையும் இந்த ரோலில் நினைத்துப் பார்க்க முடியவில்லை படம் பார்த்தால் உங்களுக்குப் புரியும். இசையமைப்பாளர் ஷான் நல்ல நண்பர் மணிக்கணக்கில் அவருடன் போனில் பேசுவேன், அவர் மனைவி திட்டுவார். இப்படத்தில் அற்புதமான இசையைத் தந்துள்ளார்.  இப்படி ஒரு கதையை நம்பி தயாரிப்பது அத்தனை எளிதான விசயமல்ல, ஆனால் அதை மிக எளிதாக மில்லியன் டாலர் சாதித்துள்ளனர். கண்டிப்பாக இந்தப்படம் பார்க்கும் அனைவரையும் மகிழ்விக்கும் நன்றி.  



 



லப்பர் பந்து இயக்குநர்  தமிழரசன் பச்சமுத்து கூறியதாவது



இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு திரையரங்கில் கைதட்டல் நிச்சயம், இது ஒவ்வொரு அறிமுக இயக்குநரின் கனவு. கண்டிப்பாக இப்படம்  பெரிய வெற்றியைப் பெறும். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மும்பை இந்தியன்ஸ் போன்றது. அவர்கள் எங்கிருந்து புதிய திறமைகளைத் தேடுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மிக அட்டகாசமான கதைகளைத் தயாரிக்கிறார்கள். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் எதிர்காலத்தில் என்ன பெரிய படங்களைத் தயாரித்தாலும், இதே போல புதிய இளைஞர்களைத் தொடர்ந்து திரைத்துறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 



 



லவ்வர் பட  இயக்குநர்  பிரபுராம் வியாஸ் கூறியதாவது..   



மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் திரைக்கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களை இயக்கும் ஒரு தயாரிப்பு நிறுவனம். அவர்கள் டூரிஸ்ட் ஃபேமிலி மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஒரு அறிமுக இயக்குநரை அறிமுகப்படுத்துகிறார்கள். இது அவர்களால் மட்டுமே முடியும். இந்தப்படமும் கண்டிப்பாகப் பெரிய வெற்றியைப் பெறும் நன்றி. 



 



தயாரிப்பாளர் அருண் விஸ்வா கூறியதாவது… 



டூரிஸ்ட் ஃபேமிலி உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த தமிழ

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா