சற்று முன்
சினிமா செய்திகள்
சுதந்திர தினத்தின்போது பொருத்தமாக வரும் ‘ஜோக்கர்’
Updated on : 08 August 2016

ராஜு முருகன் இயக்கியுள்ள "ஜோக்கர்" திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகும் நிலையில், இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு தற்போது நடைபெற்றது.
ஆரண்ய காண்டம், ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களில் நடித்த சோமசுந்தரம் படத்தின் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் காயத்ரி கிருஷ்ணன், ரம்யா, நாடகக் கலைஞர் மு.ராமசாமி, எழுத்தாளர் பவா செல்லத்துரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சாதாரண மனிதனின் வாழ்க்கையில் இருக்கும் அரசியலை பேசும் இந்த திரைப்படம், தமிழக சட்டப்பேரவை தேர்தல் காலத்தில் வெளிவருமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுதந்திர தின விடுமுறையின்போது வெளிவருகிறது.
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறிய இயக்குநர் ராஜு முருகன், "ஜோக்கர் படம் தேர்தல் சமயத்தில் வருவதைவிட சுதந்திர தினத்தில் வருவது இன்னும் பொருத்தமாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் என்பதால், ஜோக்கர் நிச்சயம் ரசிகர்களை கவர்வதோடு சிந்திக்கவும் செய்யுமென தெரிகிறது.
சமீபத்திய செய்திகள்
ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா
ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' ஜூலை 4 அன்று வெளியானது. இதன் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது.
ஹாட்ஸ்டார் பிரதீப், “படம் எடுப்பதை விட மக்களிடம் படத்தைக் கொண்டு போய் சேர்ப்பதுதான் பெரிய விஷயமாக இருக்கிறது. ராம் எனது சிறந்த நண்பர். அவருடன் சேர்ந்து மகிழ்ச்சியான படம் எடுத்திருக்கிறோம். இந்தப் படத்தில் சிவா சேர்ந்தது எதிர்பாராத விஷயம். அதுவே பெரிய பலம். சந்தோஷ் தயாநிதி அருமையான இசை கொடுத்திருக்கிறார். அப்பாவுக்கும் பையனுக்குமான அழகான கதையை மக்கள் நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி”.
இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, “படத்தில் வாய்ப்பு கொடுத்த ராம் சாருக்கு நன்றி. ஆதரவு கொடுத்து வெற்றி படமாக்கிய படக்குழுவினருக்கு நன்றி”.
எடிட்டர் மதி, “என்னுடைய முதல் படம் இது. முதல் படமே வெற்றி பெற்றிருக்கிறது. நான் சந்தோஷமாக இருந்தது மட்டுமல்லாது திரையரங்கில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராம் சாருக்கு நன்றி”.
பாடலாசிரியர் மதன் கார்க்கி, “இந்த வெற்றிப் படைப்பில் பங்கெடுத்து கொண்டது மகிழ்ச்சி. யாருக்கும் பொறாமை ஏற்படுத்தாத வெற்றியாக இது அமைந்திருக்கிறது. காலங்காலமாக இருந்த வழக்கங்களை ராம் சார் உடைத்திருக்கிறார். முத்துக்குமார் சாரையும் இந்தத் தருணத்தில் நான் நினைவு கூறுகிறேன். இவ்வளவு சிரித்து படம் பார்க்கும்போது ஏன் எல்லாரையும் அழ வைக்கும்படியாகவே சமீபகாலங்களில் அதிக படங்கள் வருகிறது என என் மகன் கேட்டார். ஓடிடியில் மட்டுமே இந்தப் படம் முதலில் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால், பிறகு தியேட்டரில் படம் ரிலீஸ் என்று முடிவெடுத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.
நடிகர் மிதுல், “திரையரங்குகளில் எல்லோரும் படத்தை சிரித்து பார்த்தார்கள். வாய்ப்பு கொடுத்த ராம் சாருக்கு நன்றி. ஸ்விமிங், வேவ் போர்டு என பல விஷயங்கள் இந்தப் படம் மூலமாகதான் கற்றுக் கொண்டேன். நன்றி”.
நடிகை கிரேஸ் ஆண்டனி, “படிப்பை விடவே சினிமாவில் நடிக்கும் ஆர்வம் எனக்கு இருந்தது. அன்பு வயதிலேயே நடிக்கும் முடிவு எடுத்து விட்டேன். என்னுடைய முதல் தமிழ் படம் வெற்றி பெற்றிருப்பது எமோஷனலாக உள்ளது. ராம் சார், சிவா சார், அன்பு மற்றும் படக்குழுவினருக்கு நன்றி”.
நடிகர், விமர்சகர் கேபிள் சங்கர், “சிவா பண்ணக்கூடிய பல விஷயங்கள் இந்தப் படத்தில் நன்றாக வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. பல விஷயங்கள் எல்லை மீறாமல் நாம் ரசித்ததற்கு முக்கிய காரணம் எழுத்தாளர் ராம். சந்தோஷ் தயாநிதி இசை படத்திற்கு பெரிய பலம். குட்டிபையன் மிதுலின் நடிப்பும் அருமை. படத்திற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்”.
கமலா சினிமாஸ், விஷ்ணு, “’பறந்து போ’ படத்தின் டைட்டில் போலவே டிக்கெட்ஸூம் பறந்து கொண்டிருக்கிறது. ஷோ ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தப் படம் பார்த்து ஆடியன்ஸ் சிரித்து கொண்டாடி வருகிறார்கள். சிவாவும் படத்தில் சூப்பராக நடித்திருக்கிறார். வாழ்த்துக்கள்”.
நடிகர் சிவா, “மனதார அனைவருக்கும் நன்றி. திருநெல்வேலி, மதுரை, சேலம் எனப் பல ஊர்களுக்கு தியேட்டர் விசிட் போய்க் கொண்டிருக்கிறோம். கிரேஸ் கண்கலங்கியதைப் பார்த்து எனக்கும் எமோஷனல் ஆகிவிட்டது. குறுகிய காலத்தில் எங்களுக்கு அருமையான இசை கொடுத்திருக்கிறார் சந்தோஷ் தயாநிதி. யுவன் இசை படத்திற்கு இல்லையே என்ற குறை எங்கேயும் தெரியாமல் வைத்திருந்தார் சந்தோஷ். ராம் சாரின் அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. அவரின் உதவி இயக்குநர் ஒருவர் பெயரைத்தான் இந்தப் படத்தில் எனது கதாபாத்திரற்கு பெயராக வைத்தார். ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம். வருடத்திற்கு ஒருமுறையாவது இதுபோன்ற ஜாலியான படங்களை ராம் சார் இயக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. படத்திற்காக மலை ஏறியது, வெயிலில் அலைந்தது இதை எல்லாம் தாண்டி மக்கள் நீங்கள் ரசித்து பார்த்ததுதான் மகிழ்ச்சி” என்றார்.
இயக்குநர் ராம், “நிறைவான மகிழ்ச்சியான பயணமாக இந்தப் படம் அமைந்துள்ளது. படம் வெற்றி பெறும் என நம்பிக்கை வைத்த மீடியா நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. இந்தப் படம் திரைக்கு வரவேண்டும் என்பதில் என்னைவிட என் உதவி இயக்குநர்கள்தான் ஆர்வமாக இருந்தார்கள். சினிமா என்பது கணிக்க முடியாத கேம். படத்தின் புரோமோஷன் பணிகள் மூலம் ‘பறந்து போ’ என்று ஒரு படம் வெளியாக இருக்கிறது என்ற விஷயம் பலருக்கும் தெரிய வந்தது. சமகால தலைமுறையினருடன் இந்தப் படம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்தது என்பது மகிழ்ச்சி. ஹாட்ஸ்டார் பிரதீப் சார் இந்தப் படத்திற்கு பெரிய பலம். சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் என்னுடைய படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் சார் படம் மீது நம்பிக்கை வைத்து படத்தை வெளியிட்டதற்கு நன்றி. சுரேஷ் சந்திரா சார் மற்றும் டீமுக்கு நன்றி. நிறைய குழந்தைகளை என் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்கள் உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய எனது மகனுக்கும் என் மனைவி, மகளுக்கும் நன்றி”.
‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்
’ஒரு நொடி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதே அணியினர் ’ஜென்ம நட்சத்திரம்’ படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன். இந்தப் படத்தை மணிவர்மன் இயக்கியுள்ளார். அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வைட்லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இந்தப் படம் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
அமோகம் ஸ்டுடியோஸ் விஜயன், “எங்கள் தயாரிப்பு நிர்வாகத்தின் முதல் படம் இது. 'ஒரு நொடி’ படத்தின் பிரிவியூ ஷோவில் இருந்துதான் இந்தப் படம் தொடங்கியது. அந்த அணி மீது எங்களுக்கு நம்பிக்கை வந்தது. அவர்களை வைத்துதான் ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் தயாரித்தோம். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவு கொடுங்கள்” என்றார்.
ஒளிப்பதிவாளர் கேஜி, “பேய்ப்படம் என்பது ஒளிப்பதிவாளருக்கு சவாலான விஷயம். அதை நான் சரியாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள்”
கலை இயக்குநர் ராம், “இயக்குநர் எதிர்பார்த்திருப்பதை நாங்கள் சரியாக செய்திருக்கிறோம். டெக்னிக்கலாக இந்தப் படம் சவாலானது. அதனால், படக்குழுவினர் கடுமையாக உழைத்துள்ளனர். படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும். பார்த்துவிட்டு சொல்லுங்கள்”
எடிட்டர் குரு சூர்யா, “டீசர், டிரைய்லர் கொடுத்த ஃபீல் நிச்சயம் படத்திலும் இருக்கும். ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது”
நடிகர் சிவம், “படம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”
நடிகர் அருண் கார்த்தி, “’ஜென்ம நட்சத்திரம்’ உருவாக காரணமாக இருந்த தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. பேய்ப்படம் பொருத்தவரைக்கும் லொகேஷன் ரொம்பவே முக்கியம். சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கியுள்ளோம். உடன் நடித்த அனைவருக்கும் நன்றி. இயக்குநர் மணிவர்மன் எப்போதும் புதிதாக செய்ய வேண்டும் என்று யோசிப்பவர். அவருக்காகவே இந்தப் படம் பெரிய வெற்றி பெறும். உங்கள் ஆதரவு தேவை”.
நடிகர் மைத்ரேயன், “இது எனக்கு முதல் படம். இந்த நிகழ்வின் விழா நாயகன் சஞ்சய். அவரது இசை அருமையாக இருக்கும். இரவு நேரத்தில்தான் பெரும்பாலும் ஷூட் இருக்கும். ஆனால், நடிகர்கள் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் எந்தவிதமான சோர்வும் இல்லாமல் கடினமாக உழைத்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி”.
நடிகை ரக்ஷா, “ஜூலை 18 இந்தப் படம் வெளியாகிறது. எல்லோரும் கடினமாக உழைத்துள்ளோம். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவு தேவை. படத்தில் வாய்ப்புக் கொடுத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.
கரூர் மாவட்ட அறநிலையத்துறை தலைவர் பரணி பால்ராஜ், “தமன், ஈரோடு மகேஷ் எல்லாம் என்னுடைய வழிகாட்டுதல்படி வளர்ந்த பிள்ளைகள். 2025-ல் தான் தமனின் வாழ்க்கை திருப்புமுனையாக அமையும் என்றேன். என் மகளை தான் அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளேன். படம் நிச்சயம் வெற்றி பெறும்”.
கேபிள் சங்கர், “இந்தப் படத்தின் தொடக்கத்தில் இருந்து நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். கமர்ஷியல் ஹாரர் படம் பார்க்க வேண்டும் என விரும்புவர்கள் நிச்சயம் இந்தப் படம் பார்க்கலாம். பயம் காட்டும் பேய் இது. கமர்ஷியல் வெற்றிப் படமாக அமைய வாழ்த்துக்கள்! மொத்த அணியினருமே கடினமாக உழைத்துள்ளனர்”.
பெஸ்ட் காஸ்ட் ஸ்டுடியோஸ் முரளி, “படத்தை நான்கு மாதங்கள் முன்பே நான் பார்த்துவிட்டேன். நன்றாக இருக்கிறது. ஜூலை 18 அன்று இந்தப் படம் வெற்றிப் படமாக அமைய வாழ்த்துக்கள்”.
நடிகர் தலைவாசல் விஜய், “இந்தப் படத்தின் புரொடக்ஷன் மேனேஜர் மூலமாகதான் வாய்ப்பு வந்தது. படத்தில் சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் தவிர்க்க முடியாத முக்கிய கதாபாத்திரம். தனக்கு என்ன வேண்டும் என்பதில் இயக்குநர் மணி தெளிவாக இருப்பார். தமன், மாளவிகா கடினமாக உழைத்துள்ளனர். ஜூலை 18 படம் வெளியாகிறது. வாழ்த்துக்கள்”.
நடிகர், தொகுப்பாளர் ஈரோடு மகேஷ், “என்னுடைய நண்பர் தமன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் இது. நம்பிக்கையோடு கதவு தட்டுபவர்களுக்குதான் வாய்ப்பு கிடைக்கும். தமன் அப்படியான நபர். ஐடியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவர் நடிப்பின் மீது ஆசைப்பட்டு கற்றுக்கொண்டு சினிமாவில் நுழைந்தார். உங்கள் நண்பர் ஜெயிக்க வேண்டும் என்று நீங்கள் மனதார நினைத்தால் உங்களுடைய வெற்றிக்கான நாளும் நிச்சயம் வரும். இன்றைய விழாவின் கதாநாயகன் சஞ்சய். இன்னும் பெரிய இடத்திற்கு வருவார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”
இயக்குநர் லோகேஷ், “சினிமா மீது ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து எடுத்த படம் இது. ஹாரர் படத்திற்கு இசைதான் பெரிய பலம். அதை சஞ்சய் சரியாகக் கொடுத்துள்ளார். டீசர், டிரைய்லர் போலவே படமும் ஆர்வமாக இருக்கும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்”
இயக்குநர் மீரான், “இரவு நேரங்களில் படம் எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. ஒரு ஷாட் எடுப்பதே கடினம். அந்த வகையில் இந்தப் படத்தை கடினமாக எடுத்துள்ளார்கள். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை வெளியிடுகிறார் . நிச்சயம் படம் வெற்றி பெறும். பாண்டிச்சேரி போய் காஃபி சாப்பிடும் அளவிற்கு படக்குழுவினர் சின்சியராக உழைத்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்”.
இயக்குநர் அறிவழகன், “என் நண்பர் கேபிள் சங்கர் இந்த படக்குழு படத்தை சிறப்பாக செய்திருப்பதாக சொன்னார். மேலும், இந்தப் படம் ஹாரர் ஜானரில் உருவாகி இருப்பதால் என்னையும் இங்கு அழைத்திருக்கிறார்கள். ‘ஜென்ம நட்சத்திரம்’ என்பது கிளாசிக் ஹாரர் ஹிட். அதே டைட்டிலில் படமும் உருவாகி இருக்கிறது. ஹார் ஜானரில் நிறைய சப் கேட்டகிரி இருக்கிறது. ஆனால், என்னைப் பொருத்தவரை எழுத்து மற்றும் அதை எப்படி திரையில் கொண்டு வருகிறோம் என்பதுதான் திரைப்படத்திற்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். இந்தப் படத்தின் டிரெய்லர் பார்க்கும் போது ‘ஜென்ம நட்சத்திரம்’ பிராப்பர் ஹாரர் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு விருந்தாக அமையும். ஹாரர் படங்களுக்கு காட்சிகள் மட்டுமே முக்கியமல்ல, அதை உருவாக்குவது மிகப்பெரிய சவால். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், கலை இயக்குநர் மற்றும் குழுவினர் என அனைவரின் ஒத்துழைப்பும் முயற்சியும் முக்கியம். குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.
நடிகை மால்வி மல்ஹோத்ரா, “’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் தொழில்நுட்பக் குழுதான் பெரிய பலம். அவர்கள் இந்தப் படத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். தமன் திறமையான நடிகர். நிச்சயம் அவருக்கு அடுத்தடுத்த நல்ல படங்கள் கிடைக்கும். தமிழ் சினிமாவில் நல்ல கதைக்கு வரவேற்பு உண்டு. ‘ஜென்ம நட்சத்திரம்’ எங்கள் அனைவருக்கும் ஸ்பெஷலான படம். நீங்கள் எதிர்பார்க்காத பல விஷயங்கள் இருக்கும். கிளைமாக்ஸ் வரை அடுத்து என்ன என்பதை ரசிகர்கள் யூகித்து கொண்டே இருப்பார்கள். அதிர்ச்சிகரமான ஹாரர் நிகழ்வை சுற்றி கதை இருக்கும்” என்றார்.
இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம், “எனக்கு மீண்டும் இசையமைக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது. இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் எனக்கான கிரியேட்டிவ் ஸ்பேஸ் கொடுத்ததற்கு நன்றி. மொத்த படக்குழுவும் கடினமாக உழைத்துள்ளனர். படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளது. அதில் டூயட் பாடலை சிநேகன் சார் எழுதியிருக்க நானும் சின்மயி மேமும் சேர்ந்து பாடியிருக்கிறோம். இன்னொரு பாடலை நீங்கள் அனைவரும் பாராட்டி கொண்டிருக்கிறீர்கள். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.
நடிகர் தமன், “’எக்ஸோர்சிஸ்ட்’, ‘ஓமன்’, ‘போல்டர்ஜிஸ்ட்’ மற்றும் பல கிளாசிக் ஹாரர் படங்கள் இப்போதும் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது. ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் கிட்டத்தட்ட ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும். இந்தப் படம் ஸ்பின் ஆஃப் போல அதாவது ப்ரீக்குவலாக இருக்கும். எப்படி ‘ஒரு நொடி’ படத்தின் கிளைமாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியானதாக இருந்ததோ அதுபோல இந்தப் படத்தின் கிளைமாக்ஸூம் அதிர்ச்சியானதாகவும் கணிக்க முடியாததாகவும் இருக்கும். ஒட்டுமொத்தக் குழுவும் குடும்பம் போல பழகியிருக்கிறோம். எங்களை வாழ்த்தும் ரசிகர்களுக்கும் மீடியாவுக்கும் நன்றி. சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறேன் என நம்புகிறேன். ‘ஒரு நொடி’ படத்தை விட இது இன்னும் மேம்பட்டதாக இருக்கும். ’ஒரு நொடி’ படம் பார்த்தப் பிறகு எப்படி எங்கள் அனைவருக்கும் இந்த வாய்ப்பு வந்ததோ அதுபோலவே, இந்தப் படம் பார்த்த பிறகும் எங்கள் அனைவருக்கும் வாய்ப்பு வரும். தலைவாசல் விஜய் சாருடன் எனக்கு சில நாட்கள் மட்டுமே காம்பினேஷன் சீன் இருந்தது. அறிவழகன் சாரின் ‘ஈரம்’ மற்றும் ‘சப்தம்’ படங்களின் சவுண்ட் குவாலிட்டி அற்புதமாக இருக்கும். ‘லெவன்’ பட இயக்குநர் லோகேஷூக்கும் வாழ்த்துக்கள். ஈரோடு மகேஷ் என்னைப் போலவே. என்னுடைய ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி. ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் போலவே அடுத்த படத்திலும் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுப்போம். அனைவருக்கும் நன்றி!”
இயக்குநர் மணிவர்மன், “’ஒரு நொடி’ படம் பார்த்த பிறகு விஜயன் சார்தான் ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்திற்கான வாய்ப்பு கொடுத்தார். அவர் இல்லாமல் இந்த படம் நடந்திருக்காது. தயாரிப்பாளர் சுபாஷினி மேம் இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்தப் படத்தை வெளியிடுவதற்கு நன்றி. பல சவாலான அனுபவங்களுடன் இந்தப் படத்தில் எங்களுக்கு கிடைத்தது. 29 இரவுகள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். பட சமயத்தின்போது எனது ஒளிப்பதிவாளர் கேஜி டைபாய்டால் பாதிக்கப்பட்டார். காலையில் மருத்துவமனை கவனிப்பில் மருந்துகள் எடுத்துக் கொண்டு இரவு படப்பிடிப்பிற்காக வந்தார். நான் நினைத்ததை திரையில் கொண்டு வரக் காரணமாக இருந்த எனது குழுவினருக்கு நன்றி. ‘ஜென்ம நட்சத்திரம்’ திரைப்படம் ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நிச்சயம் உங்கள் ஆதரவு தேவை” என்றார்.
சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'
Dark Artz Entertainment நிறுவனம் சார்பில், அறிமுக இயக்குநர் ஹரி கே சுதன் தயாரித்து, எழுதி, இயக்க, புதுமுகம் சாய்ஸ்ரீ பிரபாகரன் நடிப்பில், ஒரு கன்னியாஸ்திரியாக வாழும் ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளின் பின்னணியில், அன்பினைப் பேசும் அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மரியா”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்த பூமியில் சூழலில் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு பாதையை வாழ்க்கையாக தேர்ந்தெடுக்கிறார்கள். அன்பின் பாதை எல்லோருக்கும் உரிமையானது. மரியா ஒரு கன்னியாஸ்திரி பெண் , அவள் ஒரு சாதாரண பெண்ணைப் போல வாழ விரும்புகிறாள், ஆனால் சமூகமும் அவளைச் சுற்றியுள்ள மக்களும் அதை கடினமாக்குகிறார்கள். அவளின் அன்பு ஜெயிக்கிறதா? அவள் கனவு நனவானதா ? என்பதே இப்படத்தின் கதைகளம்.
ஒவ்வொரு தவறுக்குப் பின்னும் ஒரு நியாயம் உண்டு, அந்த நியாயத்தை அழுத்தமாக பேசும் ஒரு அழகான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் சென்னை அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் மற்றும் சிதம்பரம் பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்த்தில் அறிமுக நடிகை "சாய்ஸ்ரீ பிரபாகரன்" முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். "பவேல் நவகீதன்" ஒரு மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், சித்து குமரேசன், விக்னேஷ் ரவி சுதா புஷ்பா, ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
"மரியா" திரைப்படம் , உலகில் உள்ள பல முக்கியமான சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்றுள்ளது. இத்தாலி, மலேசியா, லண்டன், நேபாளம், புது தில்லி, ஹரியானா, மும்பை, கேரளா, உத்தரபிரதேசம், கொல்கத்தா ஆகிய நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. மேலும், "சிறந்த இந்திய திரைப்படம்", "சிறந்த இயக்குனர்", "சிறந்த திரைக்கதை", "சிறந்த நடிகை", "சிறந்த இசை" என பல விருதுகளையும் பெற்றுள்ளது.
உலகமெங்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது ....
மேலும் இப்படத்தின் அனைத்து மொழி டிஜிட்டல் ரைட்ஸ்ம், திரையரங்கம் ரைட்ஸும், சேட்டிலைட் உரிமைகளையும் Uthraa Productions, செ.ஹரி உத்ரா வாங்கியுள்ளார் என்பது குறிப்பிட்டுள்ளது
சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு
பரமு, செல்பிஷ் படங்களை இயக்கிய மாணிக் ஜெய்.N இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. ‘வச்சுக்கவா’ படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் ‘பரமு’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு ஹிந்தி மொழியில் உருவாகி வரும் செல்பிஷ் என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தநிலையில் தற்போது கைமேரா என்கிற படத்தையும் இயக்கி முடித்துள்ளார் மாணிக் ஜெய்.
இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.. மாறுபட்ட வேடங்களில் தாரை கிருஷ்ணன், ரஞ்சித் குமார் மற்றும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் மாணிக் ஜெய் நடித்துள்ளனர்.. கதையின் நாயகிகளாக சௌமியா, கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் நடித்திருக்கின்றனர்..
மனித உடம்புக்குள் மிருகங்களின் செல்கள் புகுத்தப்பட்டால், மனிதனின் குணம் மிருக குணமாக மாறினல் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது. பான் இந்தியா படமாக உருவாயுள்ள ‘கைமேரா’ விரைவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்று ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், இயக்குநர்கள் சங்க பொதுச்செயலாளர் பேரரசு, இயக்குநர் மீரா கதிரவன் மற்றும் நடிகை கோமல் சர்மா ஆகியோர் கலந்துகொண்டு இசைத்தட்டை வெளியிட்டனர்..
இந்த நிகழ்வில்
தயாரிப்பாளரும் இயக்குநருமான மாணிக் ஜெய் பேசும்போது,
“இதில் நடித்துள்ள LNT எத்திஷ் என்னுடன் செல்பிஷ் படத்தில் நடித்தவர். இந்த படம் உருவாவதற்கு காரணம் விஎப்எக்ஸ் ரோஹித் தான். செல்பிஷ் படம் எடிட்டிங்கில் கொஞ்சம் தாமதமாகும் என அவர் கூறியபோது அந்த நேரத்தில் உருவான கதை தான் இது. அந்த சமயத்தில் நானே நடிக்கிறேன் என எத்திஷ் கூறினார். உங்களுடைய உண்மையான குணாதிசயத்திற்கு நேர்மாறான கதாபாத்திரம் என்று கூறினேன். நான் நினைத்ததை விட நன்றாக நடித்திருக்கிறார். சௌமியா கிருஷ்ணா நந்து இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ரஞ்சித் என்னுடன் முதல் படத்திலிருந்து பயணித்து வருகிறார். அவரும் இந்த படத்திற்கு ரிகர்சல் இல்லாமலேயே மிகச்சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுகு ஹிந்தி மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டது தான், சில நடிகர்கள் மட்டுமே பெங்களூரில் இருந்து இதில் நடித்திருக்கிறார்கள்” என்று கூறினார். படத்தில் ஐந்து பாடல்கள் ஒன்று மோகன் ராஜன் எழுத மற்ற நான்கு பாடல்கள் கவிதார்கோ எழுதியுள்ளார்.
இசையமைப்பாளர் விக்னேஷ் ராஜா பேசும்போது,
“இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன. படம் ஒரு சயின்ஸ் திரில்லர் ஆக உருவாகி இருக்கிறது. படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்துமே பயமுறுத்தும் விதமாக, பணியாற்றுவதற்கு சவாலாக இருந்தன” என்று பேசினார்.
விஎப்எக்ஸ் பணிகளை மேற்கொண்ட ரோஹித் பேசும்போது,
இயல்பாகவே ஒரு சில மனிதர்களுக்கு கொஞ்சம் மிருக குணம் இருக்கும். இந்த மிருக குணம் அதீத அளவிற்கு செல்லும்போது மற்ற மனிதர்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் எந்தவித தாக்கத்தை கொடுக்கும் என்றும் அது அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இயக்குநர் மாணிக் ஜெய் அழகாக கூறியுள்ளார். இன்றைய சூழலில் ஒரு சில பெண்கள் போதை பொருளுக்கு அடிமையாகின்றனர். ஆண்களும் பெண்களும் சமம் தான் என்றாலும் கூட, சிலர் இப்படி மது அருந்துவது, போதைப்பொருள் பயன்படுத்துவது என ஆண்களுக்கு இணையாக போட்டி போட ஆரம்பித்து விட்டார்கள், அப்படி போட்டி போடும் இரு தரப்பினருக்குமே மனம் பற்றிய புரிதல் இல்லாதது தான் காரணம். மனம் என்பது நமது அடிமையாக இருக்கும் வரை நாம் ராஜாவாக இருக்கலாம். தூண்டிலை நோக்கி செல்லும் மீன், விளக்கை நோக்கி செல்லும் விட்டில் பூச்சி போன்ற ஓரறிவு கொண்ட உயிரினங்களுக்கே அந்த கதி என்றால் ஐம்புலன்களை கொண்ட மனிதர்கள் உஷாராக இருக்க வேண்டும்” இன்று கூறினார்.
நடிகர் தாரை கிருஷ்ணன் பேசும்போது,
“மாணிக் ஜெய்யின் பரமு படத்தில் நடித்திருந்தேன். இந்த படத்தில் வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டபோது, அடுத்த படத்தில் தருகிறேன் இதில் கொஞ்சம் கஷ்டமான கதாபாத்திரம் தான் இருக்கிறது என்றார். இருந்தாலும் படப்பிடிப்புக்கு வாருங்கள் பார்க்கலாம் என்றும் கூறினார். ஆனால் படப்பிடிப்பிற்கு சென்ற முதல் நாளே என்னை ஜட்டியுடன் நிற்க வைத்து விட்டார். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி”
என கூறினார்.
நாயகி சௌமியா பேசும்போது,
“இயக்குநர் மாணிக் ஜெய்யை எனக்கு 13 வருடங்களாக தெரியும். கடின உழைப்பாளி. இப்போது உள்ள தலைமுறைகளிடம் என்ன இல்லை. வரப்போகும் தலைமுறையினருக்கு என்ன தேவை என்பது பற்றி எல்லாம் யோசித்துக் கொண்டே இருப்பார். எனக்குள் இருக்கும் திறமையை கண்டுபிடித்து எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி. மனிதர்களுக்குல் மிருக குணம் ஒளிந்திருக்கும். அதை மறைத்து பெரும்பாலும் நடிப்பார்கள். சில நேரங்களில் அவர்களை அறியாமல் அது வெளிப்பட்டு விடும். அதை இயக்குநர் தெளிவாக புரிய வைத்திருக்கிறார். இந்த படத்தின் ஹீரோ நல்ல நடிப்பு திறமை உள்ளவர். ஆனால் அவருக்கு ஏன் வாய்ப்புகள் வரவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் பணம், செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தால் திறமை இல்லாதவர்களுக்கு கூட வாய்ப்பு கிடைக்கிறது” என்றார்.
கவி கார்கோ பேசும்போது,
இந்த படத்தில் நான்கு பாடல்களை எழுதி இருக்கிறேன். அதில் இடம்பெறும் இரண்டு பயண பாடல்களை என் வாழ்க்கை, என் தனிமை அந்த அனுபவங்களில் இருந்து எழுதியிருக்கிறேன்” என்று பேசினார்.
நாயகன் LNT எத்திஷ் பேசும்போது,
“இதில் என்னுடைய கதாபாத்திரம் எனக்குள் ஏதோ ஒன்றை கொடுத்தது. இந்த படம் நன்றாக வந்துள்ளது. சமீபத்தில் இங்கே வந்த சிவராஜ்குமார் சிறப்பாக தமிழில் பேசினார். நிச்சயமாக நான் அடுத்த படத்தில இதே போன்ற நிகழ்ச்சியில் பேசும்போது தமிழில் பேசுவேன்” என்று உறுதி அளித்தார்.
இயக்குநர் மீரா கதிரவன் பேசும்போது,
“தமிழ் சினிமாவில் எப்போதுமே திறமையானவர்களுக்கு இடம் உண்டு. அது கொஞ்சம் தாமதமாகும். அதற்காக வருத்தப்பட வேண்டாம். அதற்கு இயக்குனர்கள் ஆர்வி உதயகுமார், பேரரசு போல நிறைய பேர் உதாரணமாக இருக்கிறார்கள்” என்று கூறினார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது,
“படத்தின் ஹீரோவுக்கு கன்னடத்தில் பேசுவதா, தமிழில் பேசுவதா, கன்னடம் பேசினால் தப்பாக போய்விடுமா என கொஞ்சம் குழப்பம் இருந்ததை பார்க்க முடிந்தது. தமிழ்நாட்டில் நீங்கள் எதை வந்து பேசினாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். எங்களுக்கு மொழி ஒரு பிரச்சனை இல்லை. திறமையை தான் பார்ப்போம்.. ரஜினிகாந்தை பிடித்து போனால் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து கொண்டாடுவோம். தன்னடத்து பைங்கிளி என சரோஜாதேவியை கொண்டாடுவோம். ஆனால் இங்கிருந்து ஒரு தமிழ் நடிகையை அனுப்புகிறோம், அங்கே யாராவது தமிழ் பைங்கிளி என்று கூறுவார்களா ?
உலகத்தின் முதல் மொழி தமிழ் தான். அதிலிருந்து தான் தெலுங்கு போனது. மலையாளம் உருவானது. இதிலிருந்து தான் கன்னடம் உருவானது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இதை நாங்கள் நம்புகிறோம். கன்னடம் வேறு, தமிழ் வேறு என்றால் ஓகே. நாங்கள் எந்த விவாதமும் பண்ண மாட்டோம். தமிழ் மண்ணில் மொழிக்கும் கலைக்கும் சம்பந்தமில்லை. ஒரு டிரைலரிலேயே த்ரில்லரை கொண்டு வருவது பெரிய விஷயம். ஆனால் அதை பார்க்கும்போது ஒரு குழப்பத்தையும் உருவாக்கியது. காரணம் இங்கே 90 சதவீதம் பேர் மிருகமாகத்தான் இருக்கிறோம். அன்று சாத்தான்குளம், இன்று திருப்புவனம்.. விசாரணை எதுவும் இல்லாமல் ஒரு ஆளை அடித்து கொன்று உள்ளார்கள். அவர்கள் எப்படி மனிதர்களாக இருக்க முடியும் ? அவர்கள் மிருகங்கள்தான். நாட்டில் பெரும்பாலானவர்களிடம் மிருகத்தன்மை தான் அதிகமாக இருக்கிறது. மனித தன்மை குறைந்துவிட்டது.
இன்று போதைப் போல் கலாச்சாரம் அதிகமாகி விட்டது சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். நாட்டில் யாராவது தண்ணி அடித்து விட்டு விழுந்து கிடந்தால் அது சாதாரண விஷயம். ஒரு சினிமாக்காரர் அப்படி இருந்தால் அங்கு ஒரு தேசிய பிரச்சினையாக மாறிவிடும். நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியதாக கைதாகி இருக்கிறார். அந்த பழக்கத்தில் இருந்தது தவறுதான். கைதானதும் சரியான விஷயம் தான். ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை வன்கொடுமை செய்த நபரின் முகத்தை யாருக்காவது காட்டினார்களா ? திருப்புவனம் காவல் நிலைய சம்பவத்தில் ஈடுபட்ட அந்த குற்றவாளி காவலர்களின் முகத்தை எங்கேயாவது காட்டி இருக்கிறார்களா ? யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா ? ஆனால் ஒரு நடிகரை தீவிரவாதியை போல சித்தரிப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. கோடிக்கணக்கில் போதை பொருளை விற்றவன் புகைப்படம் கூட இப்படி வந்ததில்லை. அதனால் சினிமாக்காரர்கள் இப்படி நாம் ஒரு தவறு செய்தால் நம்மை ஒரு தேசத்துரோகிகள் போல இந்த உலகத்தில் காட்டி விடுவார்கள் என்பதை உணர்ந்து உஷாராக இருக்க வேண்டும். ஆனால் தேசத்துரோகம் பண்ணியவர்களை அப்படி காட்ட மாட்டார்கள்.
சமூக வலைதளங்களில் கூட வன்மத்தை கக்கும் நிறைய மிருகங்கள் இருக்கின்றார்கள். ஒரு படத்தை பார்க்காமலேயே விமர்சனம் செய்து அதை காலி செய்கிறார்கள். அப்படி ஒரு நோய் இப்போது வந்திருக்கிறது. இவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மக்களுக்கே பிடிக்கவில்லை என்பது போல, அந்த படத்தை காலி பண்ணி விடுகிறார்கள். தமிழ் சினிமாவில் இந்த கைமேரா படத்தின் கதையம்சம் போல வந்தது இல்லை. இயக்குநர் மாணிக் ஜெய்யின் இந்த புதிய முயற்சி வெற்றி அடைய வேண்டும்” என்று பேசினார்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,
“நான் ஜெமினி ஸ்டுடியோவில் வேலை செஞ்சுட்டு இருக்கும்போது கன்னட திரையுலகின் ஐம்பதாவது ஆண்டுவிழா. நடைபெற்றபோது என்னையும், என்னுடைய நண்பர் இயக்குனர் ராஜா ரவியையும் அனுப்பி வெச்சாங்க.. அந்த நிகழ்வில் ராஜ்குமார் சார் வர்றாரு. அப்போதைய முதல்வர், ராமகிருஷ்ண ஹெக்டே, சௌகார் ஜானகி அம்மா. வாணிஸ்ரீ, ஆர்த்தி, விஷ்ணுவர்தன், அதோட சேர்த்து நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எல்லாரும் மேடையில இருக்காங்க. அங்க இந்த மொழி பிரச்சனை வரும்போது எப்படி அத கையான்டாங்க அப்படின்னு நான் என் கண்ணால் பாத்தேன். சௌகார் ஜானகி அழகா கன்னடத்துல ஆரம்பிச்சு தமிழ்ல பேச ஆரம்பிச்சாங்க.. உடனே. கன்னடத்தில் பேசுங்க என கீழே இருந்து ஒரு சவுண்ட் விட்டாங்க. அவங்க பேச்சை நிறுத்திட்டாங்க. அதுக்கு முன்னாடி. சரோஜா தேவி பேசி முடிக்கும்போது எனக்கு அதிக வாய்ப்பு கொடுத்தது எனக்கு தமிழ் சினிமா தான் அப்படின்னு சொன்னாங்க. திரும்பவும் சத்தம் போடா ஆரம்பிச்சுட்டாங்க.. இது வந்து மொழியை எதற்கு பயன்படுத்துறோம். எந்த உணர்வை தூண்டுவதற்கும் மொழியை பயன்படுத்துகிறோம் என்பது தான்... அந்த இடத்துல பெரிய ரகளை ஆயிடுச்சி. அந்த உணர்வை தூண்டி விட்டுட்டாங்க ஜனங்க. அதன்பிறகு. ராஜ்குமார் சார் வந்து எல்லோரையும் அமைதிப்படுத்தினார்.
எனக்கு உங்களுக்கு ரஜினி சார். நிறைய பேருக்கு ரஜினி சார பிடிக்கும். சில பேருக்கு புடிக்காது. என்னை வியக்க வைத்த ஒரு மனிதர் அவர்.. அப்போ நான் பெரிய ரஜினி சார் ரசிகர் இல்ல. ஆனா அந்த நிகழ்வுல. ரஜினி சார் அன்னைக்கு பேசின ஒரு பேச்சு இருக்கு பாருங்க.. அற்புதமான பேச்சு.. அதை அவரே ஞாபகம் வச்சுருக்காரான்னு தெரியாது எனக்கு.. அப்போ. கன்னடத்துல பேசுனாரு.. கன்னடத்துல பேசும்போது அவர், இது தவறு. இதோ.. ராஜ்குமார் நான் நடிக ஆசைப்பட்ட சமயத்தில் என்னை கூப்பிட்டு டேய் நீ எல்லாம் கருப்பா இருக்க. நீயெல்லாம் நடிக்கும் நடிகனாக முடியாது. போடா வேற எதாச்சும் வேலைய பாரு என்று துரத்திவிட்டார்.. ஆனா என்னை கூப்பிட்டு நடிக்க வச்ச ஒரே ஆளு பாலச்சந்தர் சார் தான்.. அப்படின்னு சொன்னதும் எல்லாம் அமைதியா. ஆயிட்டாங்க. மொழி என்பது. நம்ம நினைக்கிறதை அடுத்தவங்களுக்கு சொல்ற ஒரு கருவி தான்னு சொன்னார்..
மொழியை ரொம்ப டீப்பா எடுத்துக்கிட்டு நாம சண்டை போட்டுக்க வேண்டியதில்லை. மொழியை மீறின ஒரு உணர்வுதான் கலை. இந்த கலைக்கு அதுவும் குறிப்பாக திரைப்படக் கலைக்கு மொழி வந்து ஒரு இடைஞ்சலாகவோ, ஒரு தடங்கலாகவோ, ஒரு பிரச்சனையாகவோ இருக்கக்கூடாது..தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், நான்கு மொழிப் படங்களும் எடுத்த ஊர் தான் இந்த சென்னை.. சினிமா துறையை பொறுத்தவரையிலும் ஒரு செட்டுல கன்னடத்துல பேசுவாங்க. அதே செட்டு காலியாகவும். அதுக்குள்ள தமிழ் நடிகர்கள் போய் அதே படத்துல நடிப்பாங்க. இங்க ராமராவ் அங்க எம்ஜியாரு, இந்த பக்கம் சிவாஜி சார், இந்த பக்கம் ராஜ்குமார், அந்தபக்கம் விஷ்ணுவர்தன். எல்லாரும் ஒன்னா கூடி கும்மி அடிச்சு எவ்வளவு அழகா இருந்த நம்ம சினிமா இன்னிக்கு ஒரு கேரவனுக்குள்ள போய் ஒழிஞ்சிடுச்சு. ஒரு கேரவனோட. மொதல்ல அதுல இருந்து மீட்டெடுப்போம். கேரவனுக்குள் இருந்து இந்த சினிமாவை மீட்டெடுத்தாலே நமக்கு பெரிய சக்சஸ் வந்துரும்.
பெரும்பாலும் இன்னைக்கு பெரிய பெரிய ஹீரோக்களுக்கே அவங்க கதையை கேட்டதாக தெரியல. எங்களை எல்லாம் டார்ச்சர் பண்ணி என்ன கதை கரெக்டா சொல்லுங்க அப்படின்னு கேட்டுட்டு இருந்தாங்க. ஒரு நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்க ஆரம்பிச்சவுடனே கதை கேக்குறதையே விட்டுட்டாங்க” என்றார்.
அனிருத்தின் புதிய சாதனை
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையாகி புதிய சாதனை படைத்திருக்கிறது.
தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இசையமைத்து, பான் இந்திய இசை அமைப்பாளராக உயர்ந்திருக்கும் அனிரூத் - ரசிகர்களின் விருப்பத்திற்காக வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு மேடை இசை நிகழ்ச்சியை ரசிகர்களின் பங்களிப்புடன் நேரலையாக நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
சர்வதேச அளவிலான இவரது இசைப் பயணம் ரசிகர்களிடத்தில் பிரபலமாக இருக்கும் தருணத்தில் எதிர்வரும் 26 ஆம் தேதி அன்று கிழக்கு கடற்கரை சாலையில் அமையப்பெற்றிருக்கும் திருவிடந்தை எனும் இடத்தில் #Hukum எனும் பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல்லாயிர கணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையானது.
இந்திய அளவிலான இசையமைப்பாளர்கள் தலைமை ஏற்று நடத்தும் இசை நிகழ்ச்சி ஒன்றின் டிக்கெட் இவ்வளவு குறைவான நேரத்தில், அதிவேகமாக விற்பனையாகி புதிய சாதனை படைத்திருப்பது இதுதான் முதன்முறை என திரையிசை ரசிகர்கள் அனிருத்தை கொண்டாடுகிறார்கள்.
இதனிடையே டிக்கெட்டுகள் விற்பனை நேரலையில் வெளியானவுடன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பதிவு செய்ய விரைந்தனர். சில நிமிடங்களிலேயே மிகப்பெரிய வரிசை காணப்பட்டது. இதில் பல ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. மேலும் டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள்.. கூடுதல் டிக்கெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என சமூக வலைதளங்கள் மூலமாக தங்களின் விருப்பத்தை பதிவிட்டனர். இதன் மூலம் சென்னைவாசிகள் அனிருத் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதும், அவருடைய இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு உற்சாகமாக இருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில், சாருகேசி கதாபாத்திரத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்க, அவரது மனைவி வேடத்தில் சுஹாசினி மணிரத்னம் நடித்திருக்கிறார். இவர்களுடன் தலைவாசல் விஜய், சத்யராஜ், ஜெயப்பிரகாஷ், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
அருண் விஷுவல்ஸ் சார்பில் ஆர்.அருண் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவா இசையமைத்திருக்கிறார். பா.விஜய் பாடல்கள் மற்றும் வசனம் எழுத, வெங்கட் கதை எழுதியுள்ளார். சஞ்சய் லோக்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ். ரிச்சர்ட் படத்தொகுப்பு செய்ய, வாசுதேவன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘சாருகேசி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர்கள் கலந்து கொண்டு படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.
சாருகேசி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யராஜ் நேரில் வர முடியாத காரணத்தால் வீடியோ பதிவின் மூலம் படம் குறித்து அவர் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். ஒருநாள் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா எனக்கு தொலைபேசி மூலம் அழைத்து சாருகேசி படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரம் பற்றி விவரித்தார். நான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா என்ற உடன் நடிக்க சம்மதித்து விட்டேன். பா விஜய் சிறப்பான வசனம் எழுதி உள்ளார். ஒவ்வொரு வசனமும் சிறப்பாக இருந்தது. இந்த படத்திற்கு கண்டிப்பா ஒய் ஜி மகேந்திரன் சாருக்கு தேசிய விருது கிடைக்கும். இன்னொரு முக்கியமான துணை கதாபாத்திரத்தில் தலைவாசல் விஜய் நடித்திருக்கிறார். சுரேஷ் கிருஷ்ணா சார் முன்பே அந்த கதாபாத்திரத்தை பற்றி சொல்லியிருந்தால் நான் அதில் நடிக்கிறேன் என்று சொல்லி இருப்பேன். அப்படி ஒரு சிறந்த கதாபாத்திரம் அது. அதிகமான ஹீரோயிசம் இருந்தால் தான் படம் வெற்றி அடையும் என்ற நிலை மாறி டூரிஸ்ட் ஃபேமிலி, மாமன், மெட்ராஸ் மேட்னி போன்ற படங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் ஓஹோ என்று வெற்றியடைய வாழ்த்துகிறேன்.” என்றார்.
வீடியோ வடிவில் பேசிய சங்கர் மகாதேவன், ”சாருகேசி படத்தின் விழாவில் கலந்து கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கும், தேனிசை தென்றல் தேவா அவர்களுக்கும், ஒய் ஜி மகேந்திரன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தற்போது வெளியாகும் படங்களுக்கு மத்தியில் சாருகேசி படம் நிச்சயம் உங்களை கவரும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.
வீடியோ வடிவில் பேசிய மோகன்லால், “சாருகேசி படத்தின் விழாவில் கலந்து கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது. இந்தப் படம் அனைவரிடமும் சென்று மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும். படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.
மதுவந்தி அருண் பேசுகையில், “இந்த மேடையில் நிற்பது ஒரு மகளாகவும், ஒரு அம்மாவாகவும் எனக்கு பெருமை சேர்க்கிறது. ஒரு மேடை நாடகம் சினிமாவாக மாறி உள்ளது. மேடை நாடகத்தின் மீது எனது தந்தைக்கு உள்ள ஆர்வம் தான் எனக்கும் வந்துள்ளது. ரஜினி சார் மற்றும் கமல் சார் உடன் அந்த காலத்தில் நிறைய படங்களில் எனது தந்தை நடித்துள்ளார். பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா சார் சாருகேசி படத்தை இயக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. தேவா சார் இந்த படத்திற்கு அற்புதமான இசையை கொடுத்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு அவர் எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் என்று அனைவரும் புரிந்து கொள்வீர்கள். தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் மூன்று தலைமுறை நடித்துள்ளது இந்த படத்தில் தான். நானும், எனது தந்தையும் நடித்துள்ளோம். என்னுடைய மகன் ரித்விக் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறான். ஒரு பாடலும் பாடியுள்ளார். இந்த படத்தை அனைவரும் கண்டிப்பாக திரையரங்கில் பார்த்து பாராட்டவும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் தலைவாசல் விஜய் பேசுகையில், “என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான படம் இது. ஒய் ஜி மகேந்திரன் அவர்களுடன் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது. எனக்கு இந்த கதாபாத்திரத்தை கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. நிச்சயம் சாருகேசி படம் மிகப்பெரிய வெற்றியடையும். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது அனைவருக்கும் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.” என்றார்.
நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், “சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது. இந்த நாடகம் பார்த்ததும் அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று தோன்றியது. வாழ்க்கையில் ஒழுக்கமாக இருப்பவர்களை சினிமா என்றும் கைவிடாது. அதற்கு எடுத்துக்காட்டு ஒய் ஜி மகேந்திரன் சார், அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். நேரத்திற்கு மரியாதை கொடுப்பவர். எனது குரு பாலச்சந்தர் சாருக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சாருகேசி படத்தை அனைவரும் குடும்பமாக சென்று பார்க்க வேண்டும்.” என்றார்.
நடிகர் ஜெயபிரகாஷ் பேசுகையில், “இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. அவரது இயக்கத்தில் நான் நடித்தேன் என்பது எனக்கு மிகப்பெரிய கௌரவம். அவர் இயக்கிய படங்களை பார்த்தால் அவர் யார் என்று புரியும், ஆனால் அதனை காட்டிக் கொள்ளாமல் இருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.” என்றார்.
நடிகை சுகாசினி பேசுகையில், “மேடையில் உள்ள அனைவரும் எனது வாழ்க்கையில் முக்கியமானவர்களாக இருந்திருக்கின்றனர். நீண்ட நாட்கள் கழித்து சாருகேசி படத்தில் தான் நல்ல வசனங்கள் இடம் பெற்றுள்ளது. அதற்கு பா விஜய் அவர்களுக்கு நன்றி. எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார் ஒய் ஜி மகேந்திரன் அவர்கள். சாருகேசி நாடகத்தை நான் இரண்டு முறை பார்த்து உள்ளேன். மேடை நாடகத்தை பொறுத்தவரை ஒய் ஜி மகேந்திரன் அவர்கள் ஒரு ஜாம்பவான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. சாருகேசி படம் வாழ்க்கையைப் பற்றி யோசிக்க வைத்தது. படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்.” என்றார்.
நடிகை ரம்யா பாண்டியன் பேசுகையில், “இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி. இந்த படம் பார்த்துட்டு அனைவரும் உறவுகளை மதிப்பார்கள். முதல் நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு சுரேஷ் கிருஷ்ணா சார் வந்து என்னை பாராட்டினார், அது எனக்கு மிகவும் ஊக்கத்தை கொடுத்தது. ரஜினி சாரை இயக்கிய ஒருவர் என்னை வைத்து இயக்குவது எனக்கு வாழ்நாள் சாதனையாக இருந்தது. படப்பிடிப்பு முழுவதும் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஒய் ஜி மகேந்திரன் சார், சுகாசினி மேடம் அவர்களுடன் நடித்தது பெருமையாக இருந்தது. அனைவருக்கும் நன்றி’ என்றார்.
தேனிசை தென்றல் தேவா பேசுகையில், “தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் உள்ள சூப்பர் ஸ்டார் படங்களுக்கு இசையமைத்துள்ளேன். இவை அனைத்திலும் எனது வாய்ப்பு கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள். ஒய் ஜி மகேந்திரன் சாருடன் 45 வருடமாக பயணித்துக் கொண்டிருக்கிறேன். ஒய் ஜி மகேந்திரன் சார் மற்றும் சுகாசினி மேடம் இந்த படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இருவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். இந்த படத்தில் பாடல்களுக்கு பா. விஜய் அவர்கள் சிறப்பான வரிகளை எழுதி இருக்கிறார், அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். இந்த நாடகத்தை ஒரு படமாக மாற்ற நினைத்த தயாரிப்பாளர் அருண் அவர்களுக்கு பாராட்டுக்கள். அனைவரும் மிகவும் ரசித்து இந்த படத்தை எடுத்துள்ளனர். இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்” என்றார்.
பா விஜய் பேசுகையில், ”சில படங்கள் பணத்திற்காக வேலை செய்வோம், சில படங்கள் நம்மளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதற்காக வேலை செய்வோம், ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே நமது மனதிற்கு நிறைவாக இருக்கும். அப்படி ஒரு படம் தான் சாருகேசி. எனக்கு அங்கீகாரம் வாங்கி கொடுத்தவர் இசையமைப்பாளர் தேவா அவர்கள் தான். மீண்டும் அவருடன் பணிபுரிவது மகிழ்ச்சியாக உள்ளது. 22 வருடமாக ஒய் ஜி மகேந்திரன் சாருடன் பணிபுரிந்து வருகிறேன். சாருகேசி படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த ஒய் ஜி மகேந்திரன் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பேசுகையில், “ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி. ரஜினி சார் இந்த நாடகத்தை பார்த்து பலமுறை ஒய் ஜி மகேந்திரன் அவர்களிடம் சொல்லி இருக்கிறார், இந்த நாடகத்தை படமாக எடுங்கள் என்று. நான் இந்த நாடகத்தை முதல் முறை பார்த்து விட்டு ஒய் ஜி மகேந்திரன் சாரிடம் சென்று இந்த கதையை படமாக எடுங்கள் என்று சொன்னேன். ஆனால் எனக்கு ரஜினி சார் இப்படி ஏற்கனவே சொல்லி இருக்கிறார் என்று தெரியாது. தயாரிப்பாளர் அருண் அவர்கள் நீங்கள் இந்த படத்தை இயக்கினால், நான் தயாரிக்கிறேன் என்று சொன்னார். நாடகத்தை படமாக மாற்றுவது மிகவும் கடினம். சாருகேசி நாடகத்தைப் பார்த்ததும் இரண்டு நாட்களில் திரைக்கதை எழுதி விட்டேன், இசையமைப்பாளராக தேவா அவர்களை கமிட் செய்தோம்.
இந்த படத்தில் பாடல் பாடிய சங்கர் மகாதேவன் அவர்களுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். தேவா அவர்கள் இசையமைக்க, அடுத்த நிமிடமே பாடல் வரிகளை எழுதிக் கொடுத்தார் பா விஜய். அதே போல வசனமும் சிறப்பாக எழுதியுள்ளார். பா விஜய்யை சமுத்திரக்கனி, சத்யராஜ் என அனைவரும் பாராட்டினர். சத்யராஜ் அவர்கள் முதல் முறையாக ஒரு படத்தை பார்த்து அழுதது இதுதான் என்று நினைக்கிறேன். தலைவாசல் விஜய் சிறப்பாக நடித்துள்ளார். ரம்யா பாண்டியன் நடிப்பை அனைவரும் பாராட்டினர். இந்த படத்திற்கு ஒரு முக்கிய தூணாகவும் மாறி உள்ளார் ரம்யா. ஒய் ஜி மகேந்திரன் அவர்கள் இல்லை என்றால் சாருகேசி என்ற படமே இல்லை. நாடகத்திற்கும், சினிமாவிற்கும் வித்தியாசத்தை புரிந்து கொண்டு சிறப்பான நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். 75 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக ஞாபக சக்தியுடன் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. அனைவருக்கும் நன்றி.” என்றார்.
ஒய் ஜி மகேந்திரன் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். எனது 75 வயதில் இப்படி ஒரு கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி, இந்த படத்தை தயாரிக்க முன் வந்த அருண் அவர்களுக்கு நன்றி. சுரேஷ் கிருஷ்ணா போன்ற இயக்குநர் கிடைப்பது வரம், இன்றைய இளம் இயக்குநர்களுக்கு மத்தியில் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் இந்த படத்தை சிறப்பாக எடுத்துக் கொடுத்துள்ளார். இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் கேட்டு கேட்டு இந்த படத்திற்குள் வந்துள்ளனர். சாருகேசி நாடகத்தை பார்த்துவிட்டு இந்த படத்தில் நான் இருக்க வேண்டும் என்று தேவா கேட்டு வாங்கினார். சுகாசினி அவர்கள் ஒரு சிறப்பான நடிப்பை படத்தில் கொடுத்துள்ளார்.
அதேபோல தலைவாசல் விஜய் நன்றாக நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கத்தி, ரத்தம் இன்றி வரும் படம் சாருகேசி. பா. விஜய் இந்த படத்தில் அற்புதமாக வசனம் எழுதியுள்ளார். சாருகேசி படம் முடிந்து அனைவரும் வெளியே வரும் போது மனதிற்கு நிறைவாக இருக்கும். ரஜினிகாந்த் சார் நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆலோசராக இருந்து வருகிறார், அவருக்கு மிகப்பெரிய நன்றி. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகள். நானும் சுரேஷ் கிருஷ்ணாவும் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் பணம் சம்பாதித்தோம் என்பதை விட, இத்தனை மனிதர்களை சம்பாதித்துள்ளோம் என்பது தான் பெருமை. படத்தின் வெற்றியுடன் மீண்டும் ஒருமுறை சந்திப்போம், அனைவருக்கும் நன்றி.” என்றார்.
இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி - நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஊடாக கடந்த இருபதாம் தேதியன்று வெளியான 'DNA' திரைப்படம் - விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
இதை தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நன்றி அறிவிப்பு விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பட தொகுப்பாளர் சபு ஜோசப் பேசுகையில், '' இந்த ஒரு தருணத்திற்காக நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உழைத்தோம். இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான நான்கு படங்களுக்கும் நான் தான் படத் தொகுப்பாளராக பணியாற்றினேன். இதற்கு முன்னரான படங்களில் பணியாற்றும்போது வணிகரீதியான வெற்றியை பெறும் படைப்பை வழங்க வேண்டும் என இயக்குநர் என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய கனவு இந்த டி என் ஏ படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார்.
ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேசுகையில், '' இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான 'ஒரு நாள் கூத்து' படத்திலிருந்து அவரை பின் தொடர்கிறேன் அவர் இயக்கத்தில் வெளியான 'ஃபர்கானா 'படத்தின் படப்பிடிப்பின் போது இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எங்கள் இருவருக்கும் இடையே நல்லதொரு புரிதலும், நட்பும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து' டிஎன்ஏ ' படத்திற்கான வாய்ப்பை வழங்கினார் அவர் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கின்றேன் என நினைக்கிறேன்.
இந்தப் படத்தில் பணியாற்றியதற்காக அனைவரும் பாராட்டுகிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் பணியாற்றிய 'பேச்சி' எனும் முதல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்தப் படத்தின் உணர்வை சிதைக்காமல் ஒளிப்பதிவு செய்திருப்பதாக நம்புகிறேன். இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. '' என்றார்.
இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா பேசுகையில், '' இது என்னுடைய இருபது ஆண்டுகால கனவு பயணம். இந்த தருணத்திற்காக மகிழ்ச்சியுடன் காத்திருந்தேன். இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கதையில் இடம்பெறும் விசயங்கள் அனைத்தும் உண்மையானவை தான். கடந்த பதினைந்து ஆண்டு கால இதழியல் துறையில் பணியாற்றிய அனுபவம் தான் இந்த கதையை எழுதுவதற்கு உதவியாக இருந்தது. ' புனைவுகளில் உண்மைத் தன்மை அதிகம் இருந்தால்.. அந்த புனைவு வெற்றி பெறும்' என என்னுடைய குரு சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இந்த கதையில் 90 சதவீதம் உண்மைத் தன்மை இருக்கிறது. பத்து சதவீதம் தான் கற்பனை கலந்திருக்கிறது.
இந்தப் படத்தில் இடம்பெறும் பாட்டி கதாபாத்திரத்தில் சாத்தூர் ஜெயலட்சுமி என்பவர் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரமும் என்னுடைய வாழ்வில் சந்தித்த பெண்மணியை முன்னுதாரணமாக கொண்டு எழுதினேன். எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை - கோஷா ஆஸ்பத்திரி - ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் - என உண்மை சம்பவங்களை தழுவித்தான் இப்படத்தின் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு அமைந்திருக்கும். இப்படத்தின் வெற்றிக்கு இத்தகைய உண்மைக்கு நெருக்கமான விசயங்களும் காரணம் என கருதுகிறேன். இதனால் எழுத்தாளர்களையும், அனுபவம் மிக்க பத்திரிக்கையாளர்களையும் இயக்குநர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.
இயக்குநர் நெல்சன் தான் என்னை தேடி கண்டுபிடித்து எழுத அழைப்பு விடுத்தார்.
நான் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்து எழுதிய பல காட்சிகளை திரையில் அற்புதமான நடிப்பால் அதர்வாவும் , நிமிஷாவும் வெளிப்படுத்தி இருந்தார்கள். இதற்காக அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை ஏதேனும் ஒரு கதாபாத்திரம் ..மற்றொரு கதாபாத்திரத்திற்கு உதவும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருப்போம். இந்த உதவி செய்யும் மனப்பான்மை எப்போது வணிகத்தனம் மிக்கதாக மாறுகிறதோ..! அங்கு குற்ற சம்பவம் நிகழ்கிறது.
இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது. கடந்த தசாப்தங்களில் வாகனத்தில் பயணிக்கும் போது 'லிஃப்ட் ' கேட்பார்கள். இன்று 'லிஃப்ட்' என்பது 'பைக் டாக்சி'யாக மாறிவிட்டது.
உதவி என்பது ஆத்மார்த்தமாகவும் , நேர்மையாகவும் இருக்க வேண்டும். இந்த மனிதநேயத்தை முன்னிறுத்திய இந்த திரைப்படம் ரசிகர்களிடம் சரியான முறையில் சென்றடைந்திருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு துணையாக நின்ற ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார்.
நடிகர் போஸ் வெங்கட் பேசுகையில், '' கேரளாவில் ஒரு படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றால்.. அங்கு ஐந்து கேரவன் இருந்தால், அதில் ஒரு கேரவன் ரைட்டர்ஸ் -காக இருக்கும். அந்த அளவில் கதாசிரியர்களுக்கு அங்கு மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் இந்தப் படத்தில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிய அதிஷாவை மேடையேற்றி, பாராட்டு தெரிவித்ததற்காக இயக்குநர் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இது ஆரோக்கியமான பயணம். என்னை பொறுத்தவரை கதாசிரியர் - வசனகர்த்தா என்பது தனி பிரிவு. அந்த பிரிவு வலிமையாக இருந்தால் ..எந்த படமும் தோற்காது. இது என்னுடைய கருத்து.
இந்தப் படத்தில் நடித்த வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் , உடன் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார்.
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசுகையில், '' தமிழ் சினிமாவின் தற்போதைய சூழலில் ஒரு படத்தின் வெற்றி என்பது ஒரு இயக்குநர் நல்ல படத்தை இயக்குவதில் மட்டுமில்லை. அந்தத் திரைப்படம் சரியான தேதியில் வெளியாக வேண்டும். இது இயக்குநர்களின் கைகளில் கிடையாது. அந்தத் திரைப்படத்திற்கு சரியான விளம்பரம் கிடைக்கப் பெற வேண்டும். அதுவும் இயக்குநர்களின் கைகளில் கிடையாது. அந்தத் திரைப்படம் விநியோகஸ்தர்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் . அதுவும் அந்த இயக்குநரின் கைகளில் கிடையாது. அதனைத் தொடர்ந்து அந்தப் படத்திற்காக போஸ்டர் ஒட்டுவது முதல் விளம்பரப்படுத்துவது வரை உழைப்புதான் வெற்றியை தீர்மானிக்கிறது. அந்த வகையில் ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் பலர் ஒன்று கூட வேண்டியதிருக்கிறது. பலரின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்க வேண்டும். அந்த வகையில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு பின்னணியில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படம் உருவாகுவதற்கு காரணமாக இருந்த இரண்டு, மூன்று இதயங்களுக்கு இந்த தருணத்தில் என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனந்துக்கும், திவ்யாவுக்கும் இடையேயான கதை 2009 ஆம் ஆண்டிலிருந்து என்னிடம் இருக்கிறது. ஆனந்தும், திவ்யாவும் பெயர்தான் வேறு வேறு. ஆனால் இந்த கதாபாத்திரங்களை நான் என்னுடைய வாழ்வில் சந்தித்திருக்கிறேன். அவர்களின் வலியை இதில் பதிவு செய்திருக்கிறேன். இவர்களின் வாழ்வில் திருமணம் என்பது நடைபெறுமா? என என்னுடைய மனதில் எழுந்த கேள்விதான் இந்தப் படத்தின் கதையை எழுத தூண்டியது. இதன் மூலம் ஒரு வலிமையான கதை... ஒரு வலிமையான உணர்வுடன் இணைந்து சொல்லும்போது அதற்கு வெற்றி கிடைக்கிறது. இதனை இன்னும் நான் பத்து ஆண்டுகள் கழித்த பின்னர் சொன்னாலும் வெற்றியைப் பெறும். அதற்கான வரவேற்பும் , அன்பும் மக்கள் அளிப்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.
அந்த உண்மையான ஆனந்திற்கும், அந்த உண்மையான திவ்யாவிற்கும் இந்த திரைப்படத்தின் வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.
இந்த படத்தில் தான் முதன்முதலாக என்னுடைய கதையை தயாரிப்பாளர் அம்பேத்குமார் ..என் முன்னிலையில் மற்றவரிடம் நான் எப்படி சொன்னேனோ...எப்படி சொல்வேனோ.. அதேபோல் சொன்னார். அவருடைய கதை சொல்லும் திறமையை கண்டு வியந்தேன். அப்போது என் கதை பிடித்திருக்கிறது. புரிந்திருக்கிறது.. என்ற சந்தோஷமும் மனதில் எழுந்தது. அந்தத் தருணம் என்னால் மறக்க இயலாது.
இந்தப் படம் உருவானதற்கு காரணமாக இருந்த சுரேஷ் சந்திரா, சந்தோஷ், ஒளிப்பதிவாளர் பார்த்திபன், படத் தொகுப்பாளர் சபு ஜோசப், எழுத்தாளர் அதிஷா, இசையமைப்பாளர்கள், பின்னணி இசையமைத்த ஜிப்ரான், ஒலி கலவை பொறியாளர் தபஸ் நாயக், இணை இயக்குநர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், விஜி சந்திரசேகர், போஸ் வெங்கட், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், அதர்வா முரளி, நிமிஷா சஜயன் என நடிகர் , நடிகைகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய சூழலில் ஒரு திரைப்படத்தை காண மக்களையும், ரசிகர்களையும் திரையரங்கத்திற்கு வரவழைக்க வேண்டும் என்றால்.. பல தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கிறது. இதன் மூலம் நிறைய நல்ல சினிமாக்கள் வரவேண்டும் . ஆரோக்கியமான சினிமா சூழல் உருவாக வேண்டும் என்ற இலக்குடன் தான் பயணிக்கிறோம்.
சினிமா மூலம் மக்களும் பயனடைய வேண்டும். அதில் பணியாற்றிய கலைஞர்களும் பயனடைய வேண்டும். அந்த வகையில் ஒரு திரைப்படத்தின் விமர்சனமும் , பார்வையும் அமைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் படைப்பாளிகளும் , விமர்சகர்களும் கைக்குலுக்கி , ஆரோக்கியமான சினிமா சூழலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்பது குறித்து மனம் திறந்து விவாதிக்க விரும்புகிறேன். என்னுடைய திரை பயணத்தில் தொடர்ந்து ஆதரித்து வரும் ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
நடிகை நிமிஷா சஜயன் பேசுகையில், '' பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகும் போது இந்த படம் ஹிட் ஆகுமா? ஹிட்டாகாதா? என்ற பதட்டம் இருந்து கொண்டிருக்கும். ஆனால் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி திரையிட்ட பிறகு கிடைத்த விமர்சனத்தால் படம் வெளியான தருணத்தில் நான் எந்த வித பதட்டமும் இல்லாமல் நிம்மதியாக உறங்கினேன். இருந்தாலும் இரண்டு மணி அளவில் இயக்குநர் நெல்சன் போன் செய்து படம் வெற்றி என சொன்ன போது மகிழ்ச்சி அடைந்தேன். இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பு சிறந்ததாக இருக்கிறது என்று பாராட்டினால்.. அது இயக்குநரைத் தான் சாரும். அவர் சொல்லிக் கொடுத்ததை தான் நான் செய்திருக்கிறேன். நான் எப்போதும் போல் இயக்குநரின் கலைஞராகத்தான் இருக்க விரும்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து திவ்யா கதாபாத்திரத்தை அளித்ததற்காக நன்றி.
ஒவ்வொரு படத்தில் இருந்தும் ஏதேனும் ஒரு விசயத்தை கற்றுக் கொள்கிறேன். இந்த படத்தில் நான் இரண்டு விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒன்று இயக்குநர். மற்றொன்று அதர்வா.
படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய போது மனதிற்கு நெருக்கமாக இருந்த படங்களில் இதுவும் ஒன்று. சக நடிகரான அதர்வா மிகுந்த திறமைசாலி. அர்ப்பணிப்பு உள்ளவர். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சொன்னதை கச்சிதமாக செய்தார். அவருடைய ஒத்துழைப்பு மறக்க முடியாது. அவரின் ஆதரவு இல்லை என்றால் திவ்யா இல்லை.
இந்தப் படத்தில் பிறந்து நாற்பது நாட்களான குழந்தையை நடிப்பதற்காக மனமுவந்து வழங்கிய அந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும் , ஊடகத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
நடிகர் அதர்வா முரளி பேசுகையில், '' டி என் ஏ படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு விழாவில் கலந்து கொண்ட உணர்வே மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் படத்திற்காக உழைத்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் இந்த ஒரு தருணத்திற்காக தான்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல படத்தில் நடிக்கிறோம் என்ற உணர்வுடன் தான் கலந்து கொண்டேன். இந்தப் படம் எந்த அளவிற்கு வெற்றி பெறும்... எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் ... யாருக்கு பிடிக்கும்... என்றெல்லாம் யோசிக்கவில்லை.
படப்பிடிப்பு நிறைவடையும்போது நல்ல படத்தில் நடித்து விட்டோம் என்ற உணர்வு தான் ஏற்பட்டது. இந்த படத்திற்கான பத்திரிக்கையாளர்கள் காட்சி திரையிட்ட போது.. படம் நிறைவடைந்த பிறகு சில நிமிடங்கள் கழித்து அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்பை தெரிவித்த போது.. உண்மையில் நெகிழ்ச்சி அடைந்தேன். ஊடகத்தினர் அனைவரும் ஊக்கமளிக்கும் வகையில் பாராட்டு தெரிவித்தனர். அது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது. 'வேர்ட் ஆஃப் மவுத்' என்று சொல்வதை இந்தப் படத்தின் வெற்றி மூலம் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.
படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை நேரில் காண்பதற்காக திரையரங்கத்திற்கு சென்றோம். அப்போது வயதான பெண்மணி ஒருவர் என்னை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு படத்தை பாராட்டினார். இந்த படத்தின் வெற்றி எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது எனச் சொன்னார். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தின் வெற்றியை அவர்கள் தங்களின் வெற்றியாக கொண்டாடினார்கள். இதை காணும் போது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது.
இந்தத் தருணத்தில் உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக என்னை நான் உணர்கிறேன்.
இயக்குநர் நெல்சன் என்னை சந்தித்து இப்படத்தை பற்றி சொன்னபோது, 'உங்களுடைய திரையுலக பயணத்தில் நல்லதொரு திரைப்படத்தை அளிப்பேன்' என நம்பிக்கையுடன் சொன்னார். அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றி இருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்- ஒளிப்பதிவாளர் -இசையமைப்பாளர்கள் - பின்னணி இசையமைப்பாளர் - என தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!
விராட் கர்ணா, அபிஷேக் நாமா, கிஷோர் அன்னபுரெட்டி, NIK ஸ்டுடியோஸ், அபிஷேக் பிக்சர்ஸ், பான் இந்தியா திரைப்படமான “நாகபந்தம்” படத்தின் பாடல் ஆயிரம் நடன கலைஞர்கள் பங்கேற்க ஆனந்த பத்மநாப ஸ்வாமி கோவில் பிரம்மாண்ட செட்டில் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
இளம் ஹீரோ விராட் கர்ணா, இந்த பான் இந்திய திரைப்படமான நாகபந்தத்தில் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் அபிஷேக் நாமா இயக்குகிறார். அபிஷேக் பிக்சர்ஸுடன் இணைந்து NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கிஷோர் அன்னபுரெட்டி இப்படத்தை தயாரிக்கிறார். லட்சுமி இரா மற்றும் தேவன்ஷ் நாமா ஆகியோர் பெருமையுடன் இப்படத்தை வழங்குகிறார்கள். படத்தின் முன்னோட்டம், அதைத் தொடர்ந்து வந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விராட் கர்ணா இந்த கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டுள்ளார். அதிரடி அவதாரத்தில் தோன்றிய அவரது ஜிம் படங்கள் படத்திற்கான அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகின்றது.
படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. தற்போது, தயாரிப்பாளர்கள் ஒரு முக்கியமான காட்சியையும் ஒரு பாடலையும் பிரம்மாண்டமான அரங்கில் படமாக்கி வருகின்றனர். அனந்த பத்மநாப சுவாமி கோயிலின் மிக பிரம்மாண்டமான செட்டை, கலை இயக்குநர் அசோக் குமார் இந்த பாடலுக்காக வடிவமைத்துள்ளார். வியக்கத்தக்க வகையில் சிறு சிறு கூர்மையான விவரங்களில், கவனம் செலுத்தி கட்டப்பட்டுள்ள இந்த அரங்கம், குழுவினரையும், ஊடகங்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பலர் இதை கேரளாவில் உள்ள அசல் கோயிலின் அட்டகாசமான மறு உருவாக்கம் என்று பாராட்டி வருகின்றனர்.
பாலிவுட்டின் பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில், விராட் கர்ணாவுடன் இணைந்து 1000 நடனக் கலைஞர்கள் இணைந்து நடனமாடும் இந்தப் பாடல், பண்டைய அழகியல், நவீன திரைப்பட உருவாக்கம் மற்றும் அட்டகாசமான நடன அமைப்பு என பல ஆண்டுகளாக நினைவில் இருக்கும் ஒரு காட்சி அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாக பந்தம் படத்தில் வரும் இந்த ஒரு எபிசோடிற்காக 10 கோடி ரூபாய் பட்ஜெட் செலவிடப்பட்டுள்ளது. மக்கள் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் ஒரு அற்புதமான அனுபவமாக இப்படத்தை உருவாக்குவதற்காகவும், அகில இந்திய காவியங்களுக்கு இணையான பிரமாண்டத்தை வழங்கவும் தயாரிப்பாளர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
“நாகபந்தம்” படத்தில் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர், மேலும் ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
பத்மநாபசுவாமி மற்றும் பூரி ஜகந்நாதர் கோயில்களில் மறைந்துள்ள, பொக்கிஷங்களின் சமீபத்திய கண்டுபிடிப்புகளின் உத்வேகத்தில், ஆன்மீக மற்றும் சாகசக் கருப்பொருள்களுடன், ஒரு அழுத்தமான ஸ்கிரிப்டை அபிஷேக் நாமா எழுதியுள்ளார். நாகபந்தம் இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோயில்களைச் சுற்றியுள்ள வரலாற்று மர்மத்தை ஆராய்கிறது, இந்த புனித தலங்களைப் பாதுகாக்கும் நாகபந்தத்தின் பண்டைய சடங்குகளை மையமாகக் கொண்டு, நவீன வடிவில் இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்கிறார், அபே இசையமைக்கிறார். கல்யாண் சக்ரவர்த்தி வசனம் எழுதியுள்ளார், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அசோக் குமார் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
“நாக பந்தம்” 2025 ஆம் ஆண்டில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில், பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது.
போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்
New Monk Pictures சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில், ஓர் இரவில் நடக்கும் காமெடி, கலந்த உணர்வுப்பூர்வமான, சமூக படைப்பாக உருவாகியுள்ள படம் “குட் டே”. ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்….
நடிகர் கலை இயக்குநர் விஜய் முருகன் பேசியதாவது…
இந்தப்படம் மிகச் சுவாரஸ்யமான படம், மிக நல்ல கதை. படம் பார்த்து விட்டேன் பிரித்திவி மிக அழகாகச் செய்துள்ளார். ஒரு இரவில் நடக்கும் கதை.உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.
ஜீவா சுப்பிரமணியம் பேசியதாவது…
இந்தப்படத்தில் எனக்கு வித்தியாசமான கதாப்பாத்திரம். இதுவரைக்கும் சேலை கட்டிக்கொண்டு நடித்திருக்கிறேன், ஆனால் இதில் எனக்கு வித்தியாசமாக போலீஸ் உடை தந்தார்கள். ஆடிசனில் எனக்கு போலீஸ் டிரெஸ் தந்தார்கள், எங்கே என்னை தேர்ந்தெடுக்க மாட்டார்களோ என நினைத்தேன், என் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. படப்பிடிப்பில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். எனக்கு வித்தியாசமான கதாப்பாத்திரம் தந்த இந்த “குட் டே” படக்குழுவிற்கு நன்றி. சிவகார்த்திகேயன் அண்ணா சூப்பர்ஸ்டார் எல்லாம் இப்போது வரும் படங்களுக்கு ஆதரவு தருகிறீர்கள், அதுபோல எங்கள் படத்தையும் பார்த்து ஆதரவு தாருங்கள். நீங்கள் தரும் ஆதரவு மிகப்பெரிது. அனைவருக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் எடிட்டர் மதன் குணாதேவ் பேசியதாவது…
எல்லாருக்கும் வணக்கம். குட் டே. இந்தப்படம் , ஒரு ஒரு இரவில் நடக்கும் கதை. அதனால் முழுக்க இரவில் தான் ஷூட் செய்தோம். இந்த டீமில் அனைவருமே நண்பர்கள் தான். எல்லோரும் எங்களால் முடிந்த அளவு சிறப்பாகச் செய்துள்ளோம். வரும் 27 ஆம் தேதி படம் வெளியாகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள்.
திரைக்கதை எழுத்தாளர் பூர்ணா ஜே.எஸ். மைக்கேல் பேசியதாவது…
இது மூன்று வருடம் கஷ்டபட்டு செய்த படம், அனைவரும் நண்பர்கள், எல்லோரும் சிறப்பாக உழைத்துள்ளோம். ரொம்ப பெரிய படம் இல்லை. ரொம்ப சின்ன படம். ஆனால் ரொம்ப அழகான படம். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா அவரோட கதையை ஒரு முறை சொன்னார். அதிலிருந்து உருவானது தான் இந்த ஒன்லைன். இந்தப்படம் என்டர்டைனும் பண்ணும். உங்களை எங்கேஜும் பண்ணும். இந்தப்படத்தில் புதிதாக ஒன்றை முயற்சி செய்துள்ளோம். இன்டர் கட் இல்லாமல் முழுப்படத்தை சொல்ல முயற்சி செய்துள்ளோம். முதல் ஒரு ரெண்டு நிமிஷம் மட்டும்தான் இன்டர் கட் இருக்கும். அதன் பிறகு முழுக்க கட் ஆகாது. கேமரா ஒரு கேரக்டரை ஃபாலோ செய்யும். இது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். இந்தக்கதை குடி மட்டும் கிடையாது. அந்த குடியால பல மனநிலைகள் பல வாரியா பல அடுக்குகளா மாறும். அந்த மாதிரியான ஒரு பல அடுக்குகள் கொண்ட ஒரு கதாபாத்திரம்தான் இந்த கதையில் இருக்கிற சாந்தகுமார். எழுத்துக்கு வாய்ப்பளித்த என்னுடைய ப்ரொடியூசர் என்னோட டைரக்டர் இருவருக்கும் நன்றி. படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது…
இது என்னுடைய வாழ்வில் நடந்த, கடந்த கால கதை, அன்பால் என்னை இதிலிருந்து மீட்டு கொண்டு வந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி. அண்ணன் பாலாஜி தரணிதரன் மற்றும் ராஜுமுருகன் ஆகியோர் என் வாழ்வில் முக்கியமானவர்கள். இருவருக்கும் நன்றி. கோவிந்த் வசந்தா இப்படத்தில் அற்புதமான பாடல்கள் தந்துள்ளார். இந்த திரைப்படம் வெறும் குடியை மட்டும் பேசுவதில்லை, குடி ஒரு பக்கம் குற்ற உணர்வையும், இன்னொரு பக்கம் அச்சத்தையும் தரும். இது இரண்டும் பின்னிப் பிணைந்த நம்ம சமூகமே, கில்ட் மேனியக் சொசைட்டி தான். இந்த சமூகத்தில் ஒருவன் எப்படி குடிகாரனா மாறுகிறான் என்பதற்கு, நிறைய நிறையக் காரணங்கள் உண்டு. அப்படி ஒரு காரணத்தில் போய் வீழ்ந்தவன்தான் நானும். ஒரு 20 வருடம் போதைக்குள்ளேயே உழன்று மயக்கத்தில் எல்லாத்தையும் செய்து, அப்படியே இருந்தவன்தான். ஒருவன் குடிகாரனா மாற சமூக கட்டமைப்பு ஒரு காரணமா இருக்கிறது. கடுமையான பொருளாதார ஏற்ற தாழ்வுகள், ஒரு பக்கம், பணம் போய்க்கொண்டே இருக்கிறது, ஒரு பக்கம் பணம் இல்லை. ஆனால் அதே உழைப்புதான் எல்லோராலும் போடப்படுகிறது. ஆனால் பணம் வரலை எனும் போது, கிடைக்கக்கூடிய அந்த ஏமாற்றம் மனிதனை போதைக்குள் தள்ளுகிறது. அந்த விரக்தியை வெளிப்படுத்த முடியாமல், அப்படி வீழ்த்தப்பட்டவர்களில் நானும் ஒருத்தன். சலிப்புணர்வு மற்றொரு முக்கிய காரணம் இன்று எல்லாருமே போதை நோக்கி ஓடிட்டு இருக்கிறோம். இந்த சலிப்புணர்வை எதிர்கொள்ள முடியாமல் இருக்கிறதுதான் காரணம். அப்படி ஒரு குடிகாரனின் வாழ்க்கையை நெருங்கி பேசுகிறது இந்தப்படம். அதிலும் இந்த திரைக்கதை பின்னப்பட்ட விதம் ஆச்சரியம் தருகிறது. இயக்குநர் அரவிந்த் அவர்களுக்கும் கதாசிரியர் மைக்கேலுக்கும் என்னுடைய மிகப்பெரிய நன்றி. வெறுமனே ஒரு கொண்டாட்டமான ஒரு படமா இல்லாமல், குடியை நியாயப்படுத்தவும் செய்யாமல், இது தப்பு அப்படிங்கிறதை ரொம்ப ஆணித்தரமாக சொல்லி, ஆனால் அவன் குடிக்கப் போனதுக்கான காரணம் அவன் மட்டும் கிடையாது, பல பேர் இருக்கிறார்கள் அப்படிங்கறதையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்கள். இந்த படம் பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கிறது. இந்த மாதிரியான நிறையப் படங்கள் வரவேண்டும். பெரிய கதை இது ஒரு நாள் இரவு நடக்கறதுனால அந்த இரவுக்குள்ள என்னென்ன சொல்ல முடியுமோ அதைச் சொல்லியுள்ளார்கள். இந்த படம் வெற்றி அடைந்து பொருளாதார ரீதியாகத் தயாரிப்பாளர் நல்ல லாபம் அடைய வேண்டும். இந்தப்படம் எல்லோருக்கும் வெற்றியைத் தரட்டும். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் அரவிந்தன் பேசியதாவது…
இந்த படத்தில் வேலை செய்த அனைத்து கலைஞர்களுக்கு என் நன்றி. அவர்களால் தான் இந்தப்படம் சாத்தியமானது. பிரித்விராஜ், கார்த்தி அண்ணா, மதன் குணதேவ அண்ணா, பூர்ணா, முக்கியமா எங்கள் கோவிந்த் வசந்தா ஆகியோருக்கு என் நன்றிகள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசியதாவது…
எல்லாருக்கும் வணக்கம். குட் டே டீம்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் படம் பார்த்து விட்டேன். மிக அருமையான படம். கார்த்திக் நேதா அண்ணா என்ன சொன்னாரோ அதையே தான் நானும் உணர்ந்தேன். இந்த படம் போதையைப் போற்றி பேசுவதில்லை. போதையிலிருக்கும் ஒருவரின் வலியும், அவரைச் சுற்றியவர்களின் துயரங்களும் பற்றியது. படம் பார்த்ததும், எனக்கு “It’s a Wonderful Life” னு ஒரு பழைய ஆங்கில படம் நினைவுக்கு வந்தது. ஒரே நாளில் நடக்கிற கதையாக இருந்தாலும், அதுக்குள்ள அந்த உணர்வின் ஆழம் இருந்தது. படத்தின் இயக்கம், திரைக்கதை, இசை எல்லாமே அருமை. "மின்மினிய ராசாத்தி" பாடல் உண்மையிலேயே நெகிழ வைத்தது. நல்ல படங்கள் ஓடும் – இந்த படமும் நிச்சயமாக ஓடும். நன்றி.
கலை இயக்குநர் சங்கர் பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம். “குட் டே” என்னுடைய இரண்டாவது படம். இப்படத்திற்கு உரிய கதைக்களம் உருவாக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்பது மிகுந்த மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர் பிரித்திவி அண்ணா, மற்றும் இயக்குநர் அரவிந்தன் பிரதர், இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. படத்தில் வேலை செய்த அனைத்து குழுவினருக்கும் நன்றிகள்.
இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது…
“இந்த படம், ஒரு குடிகாரனின் வாழ்க்கையை ‘glorify’ செய்வதற்கல்ல. குடிக்குப் பின்னால் இருக்கும் சமூக, உளவியல், பொருளாதார வேர்கள் என்னவென்று கேட்கும் படம். எனக்கும் அந்த அனுபவம் இருந்ததால்தான் இதன் அழுத்தம் புரிகிறது. நாகராஜனுடைய ஒரு சிறுகதையை படித்த மாதிரி, வைக்கம் பஷீருடைய அந்த உலகத்துக்குள்ள போய்விட்டு வந்த மாதிரி ஒரு உணர்வை இந்த படம் கொடுத்தது. விஜய் மல்லையாவின் ஒரு வீடியோவைப் பார்த்து குடியை விட்டுள்ளேன் நான். இது போன்ற படங்கள் தான் அந்த அனுபவங்களை மீண்டும் நினைவூட்டுகின்றன. “போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் – அது தவிர்க்க முடியாத சமூக அழுத்தங்களால் உருவாகிறது. இந்த படம் அந்த உண்மையை மிக அழகாகச் சொல்கிறது,” படம் பார்ப்பவர்களில் ஒரே ஒரு இதயத்தையாவது மாற்றக்கூடிய படம்தான் பெரிய படம். இந்த படமும் அந்த வகையிலான படம் தான் .” கார்த்திக் நேதா ஒரு அழகான கவிஞர். கோவிந்த வசந்தா இசை – படம் முழுக்க ஆன்மாவாக இயங்குகிறது. இந்த படத்தில் பணியாற்றிய எல்லோரும் மிகச் சிறந்த பணியைச் செய்திருக்கிறார்கள்,” அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
ட்ரீம் வாரியர்ஸ் குகன் பேசியதாவது…
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் புதிய திரைப்படமான “குட் டே”, தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான பரிமாணத்தை உருவாக்க இருக்கிறது. புதிய இளைஞர்களின் கூட்டு முயற்சியாக உருவாகியுள்ள இப்படம், மனிதர்களின் மன அழுத்தம், குடிப்பழக்கத்தின் சமூகப் பின்னணி, மற்றும் வாழ்க்கையின் அர்த்தம் என மிக ஆழமான கருத்துகளுடன் நகர்கிறது. “இந்தப் படம் புதுமையை, இன்ஸ்டிங்க்ட்டை, உணர்வை, சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடித்துள்ள பிரித்விராஜ், தனது கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். இவருடைய நடிப்பைத் தமிழ் சினிமா கண்டிப்பாக அங்கீகரிக்கும்.” “திருப்பூர் – வேலைவாய்ப்புக்காகப் பலரும் நகரும் நகரம். அந்த நகரம் எவ்வாறு ஒரு சாதாரண மனிதனை மன அழுத்தத்திற்குள்ளாகி, அவனை புதிய வழி தேட வைக்கிறது என்பதே இந்த படத்தின் கதை. இது, ஒரு மனிதனின் ஆதங்கம் மற்றும் தேடலைச் சொல்லும் அழகான திரைப்படம்.” “தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் சமூக அழுத்தங்களை இந்த படம் நுணுக்கமாகப் பேசுகிறது. மனநல மருத்துவர்களும் சொல்லும் மூன்று முக்கிய காரணங்களை இந்தக் கதையில் காணலாம்.”கோவிந்த வசந்தா மற்றும் கார்த்திக் நேதா படத்திற்கு மிக அருமையான இசை மற்றும் வரிகள் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுடைய பங்களிப்பு இத்திரைப்படத்தின் ஆன்மாவாக உள்ளது. இந்த திரைப்படம், உங்கள் அனைவரது நண்பர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கக்கூடியது. இளைய தலைமுறை மட்டுமல்லாது, எல்லா தரப்பினருக்கும் ரிலேட்டாகக்கூடிய படம். ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ள ‘குட் டே’ படத்திற்கு உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டுகிறோம் நன்றி.
தயாரிப்பாளர்,நடிகர் பிரித்விராஜ் ராமலிங்கம் பேசியதாவது...
ஒரு படம் செய்வதாக இருந்து திடீரென அது ரத்து ஆனபோது, கையில ₹1000 தான் இருந்தது. அந்த நேரத்தில் நண்பர் அரவிந்த் ‘படம் பண்ணலாமா?’ என்றார். அப்படியே அந்த நம்பிக்கையில் ஆரம்பமானது ‘குட் டே’. அன்று நாங்கள் பேசிய ஒரு உரையாடல் தான் இந்த படத்துக்கு விதையாக அமைந்தது. பணம் இல்லாமல், நண்பர்களின் நம்பிக்கையால், உருவானது தான் இந்தப்படம். உருவாக்கப்பட்டது. சிலர் நம்பிக்கையோடு பணம் கொடுத்தார்கள், சிலர் சம்பளம் வேண்டாமென நடித்தார்கள். எல்லோருக்கும் என் நன்றிகள். என் நண்பர் கவிஞர் கார்த்திக் நேதாவின் வாழ்க்கை, அவர் சொன்ன குடிப்பழக்கம், மனநிலை பற்றிய உண்மையிலிருந்துதான் இந்தக் கதைக்கரு பிறந்தது. 40–50 மணி நேரம் அவருடன் பேசியதிலிருந்து இப்படம் உருவானது. நான் சினிமாவுக்கு நடிகனாகவே வந்தேன். ஆனால் இந்தப் படம் என் முதல் ஹீரோ வாய்ப்பு. அந்த நம்பிக்கையை எனக்குக் கொடுத்தது என் டைரக்டர் அரவிந்த். அவர்தான் என்னை நடிகனாகவே உருவாக்கினார். அவருக்கு என் நன்றி. ரவி சார், தீபக் ராஜு, லைட்மேன் மயில் அண்ணன், யூனியன் நண்பர்கள், பாண்டிச்சேரி ஷூட்டிங் குழு, கோவிந்த வசந்தா, மதன் , டைரக்ஷன் டீம்... எல்லோருக்கும் என் உயிர் நன்றிகள். இவர்களுடைய உழைப்பும் நம்பிக்கையும் இல்லாமல் இந்தப்படம் சாத்தியமில்லை. எஸ்ஆர் பிரபு சார் படம் பார்த்து நிம்மதியா தூங்குங்கன்னு சொன்னார். குகன் சார், ராஜமுருகன், பாலாஜி அண்ணன், ஜிதேஷ் (Trend Music) – எல்லோரும் இந்த படத்தைத் திரைக்குக் கொண்டு வர துணைநின்றார்கள். ஜூன் 27, 'குட் டே' திரையரங்கில் வெளியாகிறது. இது நம்ம எல்லாருடைய பயணமும், கனவுகளும் இணைந்த ஒரு உண்மையான கலைச்சோதனை. உங்கள் ஆதரவும், அன்பும் இந்தப் படத்திற்குத் தேவை. அனைவருக்கும் நன்றி.
திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வரும் எளிய ஊழியன், இக்கட்டான நிலையில், தன் மேனேஜர் வீடு தேடிப் போகும் ஒரு இரவில், சந்திக்கும் மனிதர்களும், சம்பவங்களும் தான் இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் முழுக்க காமெடி கலந்து, உணர்வுப்பூர்வமான, சமூக அக்கறை மிக்க படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
பிரித்திவிராஜ் ராமலிங்கம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், காளிவெங்கட், மைனா நந்தினி, பக்ஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் முருகதாஸ், போஸ் வெங்கட் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு பூர்ணா JS மைக்கேல் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகளை மதன்குணதேவ் செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, பாடல்கள் மற்றும் கூடுதல் வசனத்தைப் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார்.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில், பிரபல தயாரிப்பாளர் S.R பிரபு இப்படத்தை வெளியிடுகிறார். வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் நடிகர் - இயக்குநர் முருகானந்தம் பேசுகையில், '' இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஜூனியர்கள் சீனியர்களை இயக்குவது போல் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் கலைஞர்களை அவர்கள் கையாண்ட விதம் நன்றாக இருந்தது. ஒரு குடும்பம் போல் படப்பிடிப்பு தளம் கலகலப்பாக இருந்தது. ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைக்கும். இந்தப் படத்தில் நடிக்க தொடங்கி நிறைவை எட்டிய போது, ஆஹா! படத்தின் படப்பிடிப்பு இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே? என்ற ஏக்கத்தை உண்டாக்கியது. இதுதான் இயக்குநர் சண்முக பிரியனுக்கு கிடைத்த முதல் வெற்றி. அந்த அளவிற்கு ஒட்டுமொத்த படக் குழுவையும் அவர் நேர்த்தியாக அரவணைத்தார்.
படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விக்ரம் பிரபு சக கலைஞர்கள் மீது அதிக அக்கறையும் அன்பும் காட்டினார். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் சுஷ்மிதா படத்தில் மட்டுமல்ல படப்பிடிப்பு தளத்திலும் எதார்த்தமான ஹீரோயினாகவே இருந்தார். அவருக்கும் வாழ்த்துக்கள்.
படத்தில் பணியாற்றத் தொடங்கும் போது இயக்குநர் யார் ? என்று தெரியாது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் எனக்கு தலை வலிக்கிறது உடல் வலிக்கிறது என ஏதாவது காரணத்தை சொன்னால் உடனே ஒரு பெயரை சொல்லி அந்த மாத்திரையை வாங்கி சாப்பிட சொல்வார். அதன் பிறகு தான் அவர் மருத்துவர் என தெரியவந்தது. எந்த வேலை பார்த்தாலும் இயக்குநராக வரலாம். ஆனால் ஒரு மருத்துவராக இருந்து இயக்குநராகி இருக்கிறார் என்றால்.. முதலில் அவருடைய பெற்றோர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
லவ் மேரேஜ் திரைப்படத்திற்கு அரேஞ்ச் மேரேஜ்க்கு வரும் கூட்டம் போல் அனைவரும் வருகை தந்து வெற்றி பெற செய்ய வேண்டும்.” என்றார்.
தயாரிப்பாளர் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ பேசுகையில், ”எல்லோருக்கும் அவர்களுடைய முதல் குழந்தை ஸ்பெஷலானது. அது கடவுளின் ஆசி என்று சொல்வார்கள் அந்த வகையில் எங்களின் அஸ்யூர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் படம் லவ் மேரேஜ். நான் வணங்கும் பெருமாளின் அருளுடன் ஜூன் 27ஆம் தேதியன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் நடிகர் தனுசுக்கு நன்றி. இப்படத்தின் கதையை இயக்குநர் சண்முக பிரியன் முதன் முறையாக சொல்லும் போதே எனக்கு பிடித்திருந்தது. இதுதான் எங்களின் முதல் படமாக இருக்க வேண்டும் என தீர்மானித்தோம். இந்த கதையை மிகவும் திறமையாகவும் இயக்கியிருக்கிறார். ரசிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கும் வகையில் படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது. அந்த மண்ணின் மணம் மாறாமல் அழகியலுடன் படம் உருவாகி இருக்கிறது. படத்தில் நடித்த நடிகர்களின் பாசிட்டிவிட்டி படத்திலும் இடம் பிடித்திருக்கிறது.
இந்தப் படத்தில் நடித்த விக்ரம் பிரபு , சத்யராஜ், சுஷ்மிதா பட், அருள்தாஸ், ரமேஷ் திலக் ஆகிய அனைத்து நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் இந்தப் படத்திற்காக எங்களுடன் இணைந்து பணியாற்றிய ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகருக்கும், இந்த படத்தின் இசையை வெளியிட்ட சோனி மியூசிக் நிறுவனத்திற்கும், படத்தை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலனுக்கும், தயாரிப்பில் எங்களுடன் தொடக்கத்திலிருந்து முழு ஒத்துழைப்பு வழங்கிய தயாரிப்பாளர் யுவராஜ் கணேசனுக்கும், சிறப்பு விருந்தினராக வருகை தந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'லவ் மேரேஜ்' ஜாலியான படம். ஜூன் 27ஆம் தேதியன்று அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து கொண்டாடி ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடிகை சுஷ்மிதா பட் பேசுகையில், ”இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆண்டவனின் ஆசியாகவே பார்க்கிறேன். இதற்குக் காரணமாக இருந்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழில் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறேன். இந்தப் படத்தில் அனுபவம் மிக்க இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறேன். இப்போது அவர்கள் அனைவரும் என்னுடைய குடும்பமாக ஆகிவிட்டனர். விக்ரம் பிரபு சாரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் திறமையானவர். நட்பாக பழகக் கூடியவர். இந்தப் படத்தில் அனைவரும் தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். இதற்காக அனைவருக்கும் வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசுகையில், ”லவ் மேரேஜ் படத்தின் ட்ரெய்லரை.. 90ஸ் கிட்ஸ்களின் எதிரொலியாகத்தான் பார்க்கிறேன். இந்த படத்தின் முன்னோட்டத்துடன் என்னால் எளிதாக தொடர்பு கொள்ள முடிந்தது. இப்படத்தில் மிஷ்கின் பாடிய பாடலை கேட்டவுடன் இந்தப் பாட்டு ஹிட் ஆகும் என சொன்னேன். ஒரு படத்திற்கு பாசிட்டிவிட்டியை முதன்முதலாக பரப்புவது அப்படத்தின் டைட்டிலிருந்து தொடங்கும் என்பதை நம்புபவன். அந்த வகையில் லவ் மேரேஜ் என்பது எல்லா தரப்பினரும் இயல்பாக கேட்டிருக்கும் பார்த்திருக்கும் வார்த்தை.
நம்முடைய நண்பர்கள், உறவினர்கள் யாராவது காதலித்திருப்பார்கள் அல்லது காதலித்துக் கொண்டிருப்பார்கள். காதல் என்பது திருமணம் வரை செல்லக்கூடியது தான். இதனால் இந்தப் படத்திற்கு டைட்டிலே மிகப்பெரிய வெற்றியைத் தரும். இதற்காக இயக்குநருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் ரசிகன் நான். அவரை நீண்ட காலமாக பின் தொடர்கிறேன். அவருடைய இசையில் ஒலிகள் வித்தியாசமாக ரசிக்கக் கூடிய வகையில் இருக்கும். அந்த ஓசை இளைய தலைமுறையினர் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
விக்ரம் பிரபு கடினமாக உழைக்கக்கூடிய நடிகர். பக்கத்து வீட்டு பையனாக இந்த படத்தில் அவர் நடித்திருக்கிறார் . இதற்காகவே இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். அவர் வில்லனாகவும் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பரிசோதனை முயற்சியாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். அவர் இயல்பாக நடித்திருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.” என்றார்.
பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், “தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தான் இந்த படக்குழுவினரை அறிமுகப்படுத்தினார். இயக்குநர் சண்முக பிரியன் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனை சந்திக்கும் போதெல்லாம் ஷான் ரோல்டன் உற்சாகமாகி விடுவார். அந்த அளவிற்கு இயக்குநரை நேசிப்பார். இயக்குநர் போனில் 'அண்ணா' என அழைக்கும் போதெல்லாம் அந்த சொல்லிற்கான உணர்வை நான் உணர்ந்திருக்கிறேன். இந்தப் படத்தில் மிஷ்கின் பாடிய பாடலை தான் நாங்கள் முதல் முதலில் உருவாக்கினோம். மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் அந்தப் பாடல் உருவானது. அதாவது ஒரே நாளில் இந்த பாடலை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் அந்தப் பாடலை ஒரு மணி நேரத்தில் நிறைவு செய்தோம். இதற்காக மிஷ்கினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர்களின் திருமண கலாச்சாரத்தில் மாப்பிள்ளை அழைப்பிற்கான பாடல் மிக அரிதாகத்தான் இருக்கிறது. அந்தக் குறையை போக்குவதற்காக இந்த படத்தில் ஒரு மாப்பிள்ளை அழைப்பிற்கான பாடல் இருக்கிறது. பாடல் நிறைவு பெற்ற பின் இயக்குநர் சண்முகப்பிரியன் என்னை தொடர்பு கொண்டு இந்தப் பாடலில் எங்கேனும் சில வார்த்தைகள் திரும்பத் திரும்ப வர வேண்டும் என விரும்புகிறேன் என்றார். அதன் பிறகு புதிதாக நான்கு வரிகளை சேர்த்த பிறகு பாடலின் தரம் மிக உயர்ந்ததாக இருந்தது.
இந்தப் படத்தில் நான் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறேன். ஷான் ரோல்டனுடன் இணைந்து பணியாற்றிய பிறகுதான் எனக்கு சிறந்த பாடலாசிரியருக்கான ஆனந்த விகடன் விருது கிடைத்தது. இதற்காகவும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், “இந்தப் படத்தில் நான் பணியாற்றியதற்கு மிக முக்கியமான காரணம் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தான். இதற்காக முதலில் அவருக்கு நன்றி. இயக்குநர் என்னை சந்தித்து கதை சொன்ன பிறகு கதையைப் பற்றிய ஒரு விசுவல் பேலட்டை ( காட்சி மொழிக்குரிய சித்திரங்கள்) காண்பித்தார். அதைப் பார்த்தவுடன் இந்த படத்தில் பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன்.
நான் ஒரு 90ஸ் கிட்ஸ். அதனால் திரையரங்கத்திற்கு செல்லும் போது தமிழ் படம் பார்க்க வேண்டும் என்று தான் செல்வோம். தற்போது பான் இந்திய திரைப்படங்களை பார்க்கிறோம் தென்னிந்திய திரைப்படங்களை பார்க்கிறோம். 'டூரிஸ்ட் ஃபேமிலி' போன்ற தமிழ் படத்தை பார்த்த மன நிறைவை ஏனைய திரைப்படங்கள் ஏற்படுத்துமா? என்று கேட்டால் தெரியாது. வேற்று மொழி திரைப்படங்களும் இங்கு வெற்றி பெறுகிறது. ஆனால் தமிழர்களுக்கு என ஒரு அடையாளம் இருக்கிறது. அந்த அடையாளம் இந்த படத்தின் கதையைக் கேட்கும் போது இருந்தது. இயக்குநர் சண்முக பிரியன் இசைமீது பற்று கொண்டவர். இப்போது அவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஆகிவிட்டார். அவருக்கு திரைத் துறையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் உண்டு.
புதிய தயாரிப்பாளர்களான டாக்டர் ஸ்வேதாவும் , டாக்டர் தீரஜும் சினிமா மீது உள்ள காதலால் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். அதை அவர்களை சந்தித்து பேசும்போது தெரிந்து கொண்டேன். ஆர்வம் மட்டும் இல்லாமல் சினிமா பற்றிய வர்த்தக அறிவும் அவர்களிடத்தில் இருக்கிறது. விக்ரம் பிரபு சினிமாவில் நான் சந்தித்த நபர்களிலேயே நேர்மையானவர் . கண்ணியமானவர் . அவர் நடித்த படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். அவருடன் இணைந்தும் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது சிறந்த தொடக்கமாக இருக்கும் என கருதுகிறேன். அவருடைய படத்தில் சிறந்த பாடல்களை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. அது இந்த படத்தில் சாத்தியமாக இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் ஆல்பமாக ஹிட் ஆகும்.மிஷ்கின் ஒரு முழுமையான கலைஞன். அவர் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் நூல் தான். அந்த நூலில் கட்டப்பட்ட பூக்கள் தான் மோகன் ராஜாவின் பாடல் வரிகள். இதனால் பூமாலையில் அவர் பூவாக இருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றுவது எப்படி இருக்கும் என்றால் நல்ல குளிரான சூழலில் கதகதப்பான நெருப்பிற்கு முன் உட்காருவது போல் சௌகரியமாக இருக்கும். அவர் தமிழ் சினிமாவில் பாடல்கள் மூலம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு பல தமிழ் வார்த்தைகளையும் ,தமிழ் தத்துவங்களையும் சாமர்த்தியமாக உள்ளே புகுத்தி வருகிறார். இந்தப் படத்தில் கூட காதலுக்கான அழகான வரிகளை எழுதி இருக்கிறார். இந்தப் படத்தை அனைவரும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு சென்று கண்டு ரசிக்கலாம். இந்தப் படம் சிறந்த படமாக இருக்கும். அனைவருக்கும் திருப்தியை அளிக்கும் படமாகவும் இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை'' என்றார்.
விநியோகஸ்தர் சக்தி வேலன் பேசுகையில், ”சில தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து திரையரங்க அதிபர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு 'லவ் மேரேஜ்' படத்தின் பிரத்யேக காட்சி திரையிட்டால் உடனே தகவல் தெரிவிக்கவும் நான் என்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் அந்தப் படத்தை காண ஆவலாக இருக்கிறேன் என்றார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக திரைப்படங்களை முன்கூட்டியே திரையிட்டால் திரையரங்க தரப்பிலிருந்து அதனை காண்பதற்கு ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு வாரத்தில் நான்கு ஐந்து படங்கள் திரையிடுவதால் அதற்கான பணிச்சுமை இருக்கும்.
அவர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸின் நெருங்கிய நண்பரும் கூட. இவர்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்த பொழுது விரைவில் வெளியாகும் நல்ல படங்களை பற்றிய பேச்சு நடந்தபோது .. லவ் மேரேஜ் கண்டிப்பாக மிக நல்ல படமாக இருக்கும் என ஏ ஆர் முருகதாஸ் அவரிடம் தெரிவித்து இருந்தாராம்.
ஒரு படம் வெளியாவதற்கு முன் அங்கீகாரம் கிடைப்பது என்பது... அதிலும் அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்கிய படத்திற்கு இந்தியா முழுவதும் திறமையான இயக்குநர் என அறியப்பட்ட ஏ ஆர் முருகதாஸ் சிறந்த படம் என பாராட்டும் போது உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் அன்னை இல்லத்தில் வாரிசான விக்ரம் பிரபு இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பை வழங்கி சிறப்பித்து இருக்கிறார். 90ஸ் கிட்ஸ் ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்துடன் தங்களை எளிதாக தொடர்பு படுத்திக் கொள்வார்கள். திருமணம் தொடர்பான விசயங்களை தமிழ் சினிமாவிற்கான பாரம்பரிய இலக்கணங்களுடன் உருவாகி இருக்கும் படம். அற்புதமான - அழகான பீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது.
இந்த திரைப்படத்துடன் வணிக ரீதியாக தொடர்பே இல்லாத தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன், இப்படத்தின் வெற்றிக்காக தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறார். இது எனக்கு மிகப்பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது.
அந்த அளவிற்கு இயக்குநர் சண்முக பிரியன் திரையுலகில் வலிமையான நட்பு வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இதனை நான் அவரின் வெற்றியாகவே பார்க்கிறேன். மருத்துவராக இருந்தும் சினிமா மீதான ஆர்வம் காரணமாக இப்படத்தின் மூலம் அறிமுக தயாரிப்பாளராக களம் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர்கள் ஸ்வேதா ஸ்ரீ - தீரஜ் ஆகியோருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றால் இவர்களைப் போல் ஏராளமான புதுமுக தயாரிப்பாளர்கள் திரையுலகிற்கு வருகை தருவார்கள். ரசிகர்களுக்கும் நல்ல படைப்புகள் கிடைக்கும்.” என்றார்.
இயக்குநர் சண்முக பிரியன் ப
- உலக செய்திகள்
- |
- சினிமா