சற்று முன்

16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்'   |    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பான 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' செப்டம்பர் 18 முதல் உலகம் முழுவதும்!   |    பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நடிகை ரெஜினா கசாண்ட்ரா!   |    ‘மூன்வாக்’ திரைப்படம் — உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியது!   |    2025 தீபாவளிக்காக பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம்!   |    கெட்ட எண்ணம் உள்ளவர்கள் நிர்வாகத்திற்கு வந்துவிட்டால் எல்லாம் முடிந்தது - ஆர்.கே. செல்வமணி   |    முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட விஜய் சேதுபதியின் 'ஏஸ்' (ACE ) பட முன்னோட்டம்!   |    சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்த!   |    பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்த சூர்யா!   |    கோலாகலமாக நடைபெற்ற டாகடர்.ஐசரி கே கணேஷ் மகள் சிறப்பு திருமண வரவேற்பு!   |    கேன்ஸ் 2025 திரை விழாவில் அதிகாரபூர்வ போட்டியில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் 'மாண்புமிகு பறை'!   |    முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்ட 'கிராண்ட் காலா ஃபேஷன் வீக்'   |    இதயத் துடிப்பை எகிற வைக்கும் கிரைம் திரில்லர் 'பிளாக் ரோஸ்' முன்னோட்டம் வெளியீடு!   |    பரபரப்பான 'டென் ஹவர்ஸ்' திரைப்படம் இப்பொழுது டெண்ட்கோட்டா OTT இல்!   |    'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு!   |    அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக கூறும் நடிகை   |    நடிகர் சூர்யா பத்து கோடி ரூபாய் நிதியுதவி!   |    இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை! - சிறுத்தை சிவா   |    இயக்குநர் மிஷ்கின், துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் 'ஐ அம் கேம்' பூஜையுடன் துவங்கியது!   |   

சினிமா செய்திகள்

சினிமாவை கற்க எளிய வழி - 'நிழல் - பதியம் பிலிம் அகாடமி'
Updated on : 13 September 2016

தமிழகம் முழுவதும் ஏராளமான திரைப்பட பயிற்சி பட்டறைகளை நடத்தி திரை கலைஞர்களை உருவாக்கி வந்த நிழல் - பதியம் அமைப்பின் அடுத்த முன்னெடுப்பாக "நிழல் - பதியம் பிலிம் அகாடமி" (NIPFA) தொடங்கப்பட்டுள்ளது.



 



திரைப்பட உருவாக்கம் என்பது மாபெரும் கடின செயல்பாடு என்ற நிலையை உடைத்து பயிற்சி பட்டறைகள், திரையிடல்கள், வகுப்புகள் - உரையாடல்களை நிகழ்த்தி பலரையும் எளிதாக திரைப்படங்களை உருவாக்க செய்தவர் நிழல் திருநாவுக்கரசு.



 



அவரின் முன்னெடுப்பில் உருவம் பெற்றுள்ள நிழல் - பதியம் பிலிம் அகாடமியும், தொடர்ந்து இந்த பணியை கொண்டு செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.



 



வகுப்புகள், செயல்பயிற்சிகள் நிரம்பியிருக்கும் நிழல் - பதியம் பிலிம் அகாடமியில் இயக்கம், எழுத்து, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஒப்பணை அடங்கிய ஒரு வருட பட்டய படிப்பும், இவைகளில் ஏதேனும் ஒன்றில் நான்கு மாத படிப்பும் உள்ளது.



 



இதுமட்டுமின்றி நிழல் - பதியம் அமைப்பின் வழக்கமான செயல்பாடுகளான பயிற்சி பட்டறைகள், திரையிடல்கள், படைப்பாளிகளுடனான உரையாடல்கள், குறும்பட - ஆவணப்பட தயாரிப்புகள் மற்றும் அதற்கான அடையாளங்களை பெற்றுக்கொள்வதற்கான வழிநடத்துதல் என அனைத்தும் இந்த பிலிம் அகாடமியின் மூலம் கிடைக்க பெறலாம்.



 



மற்ற சினிமா பயிற்சி நிறுவனங்களை போன்று பல லட்சங்களை கட்டணமாக பெறாமல், மிகக் குறைந்த கட்டணத்தை நிர்ணயித்து இந்த பிலிம் அகாடமி துவங்கப்பட்டுள்ளது.



 



இதில் கூடுதல் சிறப்பம்சமாக நிழல் - பதியம் பிலிம் அகாடமியில் ஓராண்டு பட்டய படிப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் திரைத்துறையில் உள்ள முன்னணி கலைஞர்களிடம் வாய்ப்பு பெற்றுத்தரப்பட உள்ளது.



 



பொழுதுபோக்கின் உச்சமாக திகழும் தமிழ் சினிமாவை, நம் மண்ணின் படிந்திருக்கும் இருளை வெளிச்சத்தில் கொண்டுவரவும், நமது வாழ்வியலை உரத்து பேசும் கலை வடிவமாகவும் தரும் மாற்று சினிமாவை உருவாக்க நிச்சயம் இதுபோன்ற அமைப்புகள் முக்கிய தேவையாக உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா