சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

விஜய் படத்தில் நடிக்கவில்லை என்கிறார் ஆர்.கே. சுரேஷ்!
Updated on : 14 September 2016

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "பைரவா" திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை என்று தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார்.



 



இதுதொடர்பில் விளக்கம் அளித்துள்ள ஆர்.கே. சுரேஷ், "நான் இதுவரை விநியோகஸ்தராக 40 படங்களை வெளியிட்டி ருக்கிறேன். 'சலீம்' முதல் அண்மையில் வெளியாகியுள்ள 'தர்மதுரை' போல சில படங்களைத் தயாரித்தும் இருக்கிறேன்.



 



ஆனால் நானே  என் தயாரிப்பில் நடிக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. என் தயாரிப்பில் குடும்பத்துடன் பார்க்கும் வகையிலான வணிகரீதியான தரமான படங்கள் தயாரிக்கவே ஆசை. நான் இப்போது நடிக்கும் படங்கள் எல்லாம் வெளி நிறுவனப் படங்கள்தான்.



 



'தனிமுகம்' என்கிற படம் இப்போது தொடங்கப் பட்டிருக்கிறது. இயக்குபவர் சஜித்.இவர், பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஸின் இணை இயக்குநர். சஜித் என்னிடம் சொன்ன கதை பிடித்து விட்டது. இது ஹீரோயிசம் வெளிப்படுத்தும் படமல்ல . இருவேறு முகம் காட்டி, நடிப்புத்திறமையை வெளிப்படுத்த  வாய்ப்புள்ள கதை.



 



கதாநாயகனாகவே நடிப்பது என்பது என் கொள்கையல்ல. பிற நாயகர்கள் படங்களில் நல்ல நடிப்பு வாய்ப்புள்ள  கதைகளிலும் நடிப்பேன்.



 



உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய வேடம் ஏற்றுள்ளேன். அதில் வில்லனாக வேறு நடிகர்தான் நடிக்கிறார்.



 



கதை நாயகனாக சரவண ஷ்க்தி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறேன். சீனுராமசாமி இயக்கத்தில் ஒரு படம் உள்ளது. இவை தவிர, புதிதாக  சிலபடங்களும் இருக்கின்றன" என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா